October 07, 2017

நட்சத்திரம் பற்றி அல்குர்ஆன் சொன்ன உண்மையும், சுவீடன் ஆராய்சியாளரின் கண்டுபிடிப்பும்...!!

'தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகிற சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'
-குர்ஆன் 6:97

இந்த வசனத்தின்படி தரையிலும் வானத்தில் பறந்தும் திரிகிற உயிரினங்களுக்கு வழிகளை அறிந்து கொள்வதற்காகவே நட்சத்திரங்களை படைத்துள்ளதாக இறைவன் கூறுகிறான். கண்டம் விட்டு கண்டம் செல்லும் பல பறவைகள் சரியாக புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவதை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருப்போம். இவை எப்படி வந்து தனது இருப்பிடத்தை சரியாக அடைகின்றன என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இறைவன் படைத்து வைத்துள்ள நட்சத்திரங்களே இந்த பறவைகளுக்கு வழி காட்டுகின்றன. படகுகளில், கடலில் செல்லும் மனிதனுக்கும் நட்சத்திரங்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன.

'ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழிகாட்டியவனே எங்கள் இறைவன்' என்று அவர் கூறினார். -குர்ஆன் 20:50

உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி அது இன்ன காரியம் செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் அதற்கு தந்துள்ளான் இறைவன். அதன்படி நட்சத்திரமானது உலக உயிரினங்கள் அனைத்துக்கும் வழி காட்டியாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டுள்ளது. வானத்தில் இத்தனை நட்சத்திரங்கள் ஏன் என்று பலமுறை நாமே கேட்டிருப்போம். எந்த ஒன்றையும் வீணுக்காக படைக்கவில்லை என்று இறைவன் சொன்னது எந்த அளவு உறுதியாகிறது பார்த்தீர்களா?

'வானத்தையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை' -குர்ஆன் 21:16

இனி பிபிசியில் வந்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்:

'மண் உருண்டைகளை உருட்டிச் செல்லும் பல வண்டுகளை நாம் பார்த்திருப்போம். அவ்வாறு உருட்டிச் செல்லும் போது அந்த வண்டுகளின் கண்கள் சாய்ந்து அதன் பார்வை நட்சத்திரங்களை நோக்கி இருந்ததை கண்ணுற்று ஆச்சரியப்பட்டேன். உருட்டிச் செல்லப்படும் அந்த மண் உருண்டையானது எந்த திசையில் சென்றாலும் அந்த வண்டின் கண் பார்வை மட்டும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை நோக்கியே நகர்கிறது. அந்த நட்சத்திரத்தை இலக்காக வைத்து அந்த வண்டானது தனது இருப்பிடத்தை மிக இலகுவாக அறிந்து கொள்கிறது. இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் கூட தங்களின் பாதையை அறிந்து கொள்ள அவை நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன. மனிதனும், பறவையினங்களும் வழி அறிவதற்கு நட்சந்திரங்களின் உதவியை நாடுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் வண்டுகளும் கூட வழி அறிவதற்கு அதே நட்சத்திரங்களையே தங்கள் வழிகாட்டிகளாக கொள்கின்றன என்பது தற்போதய கண்டுபிடிப்பாகும்.' என்று ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் டேக்கி பிபிசியிடம் தெரிவித்தார். அதற்கான ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.


Scientists have shown how the insects will use the Milky Way to orientate themselves as they roll their balls of muck along the ground.

Humans, birds and seals are all known to navigate by the stars. But this could be the first example of an insect doing so.

The study by Marie Dacke is reported in the journal Current Biology.

"The dung beetles are not necessarily rolling with the Milky Way or 90 degrees to it; they can go at any angle to this band of light in the sky. They use it as a reference," the Lund University, Sweden, researcher told BBC News.

"I think night-flying moths and night-flying locusts could benefit from using a star compass similar to the one that the dung beetles are using," she said.

http://www.bbc.com/news/science-environment-21150721

பிபிசிக்கு அளிக்கப்பட்ட மேற்கண்ட ஆய்வின் முடிவானது மனிதனும், பறவையினமும், கடல் வாழ் உயிரினங்களும், நிலத்தில் வாழும் உயிரினங்களும் தங்களின் வழியை இரவில் அறிந்து கொள்ள நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன என்று கூறுகிறது.

இது போன்ற எந்த ஆய்வும் இல்லாமல் அறிவியல் உண்மைகளை எந்த சலனமும் இல்லாமல் மிக அலட்சியமாக குர்ஆனானது சொல்லிச் செல்கிறது. குர்ஆனை ஆய்வு செய்ய புகுந்தால் ஒவ்வொரு நாளும் புதுப்புது உண்மைகளாக மனிதகுலத்துக்கு பல உண்மைகளை தந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குர்ஆனை ஆய்வு செய்ய ஏனோ பல மனித மனங்கள் மறுத்து வருகின்றன.

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'

-குர்ஆன் 4 : 82

'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுளளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப் படுத்துகிறது.

-குர்ஆன் 17 : 41

-Nazeer Ahamed-

3 கருத்துரைகள்:

மண் உருண்டைகளை உருட்டிச்செல்லும் வண்டுகளா? அது மண் இல்லை மலம்.
It's dung beetle not dust beetle.

To avoid the such word he used muck

nallavisiyam sonnaal kuraipidikkaadeenga....

Post a Comment