Header Ads



கட்­டாக்­கா­லிகள் சட்­டத்தின் கீழ், ஆணுறைகளை சமர்பிக்காதீர்கள் என நீதிமன்றம் உத்தரவு

பால்­வினை நோய்­களைத் தடுக்கும் பொருட்­களை வழக்கின் தடயப் பொருட்­க­ளாக நீதி­மன்றில் சமர்ப்­பிக்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. பால்­வினை நோய்­களைத் தடுக்கும் ஆணுறை உள்­ளிட்ட பொருட்­களை வழக்கு தடயப் பொருட்­க­ளாக நீதி­மன்றில் சமர்ப்­பிக்கக் கூடாது என அத­னூ­டாக சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ் திணைக்­க­ளத்தின் சட்டம், ஒழுக்­காற்று மற்றும் நன்­ன­டத்தை பிரி­வூ­டாக இந்த அறி­வித்தல் பிறப்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் ருவான் குண­சே­கர தெரி­வித்­துள்ளார்.

இது­வரை பாலியல் தொழிலில் ஈடு­படும் பெண்­களை கைது செய்யும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் வழக்கு தடயப் பொருட்­க­ளாக அவர்­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­படும் ஆணுறை உள்­ளிட்ட பால்­வினை நோய்கள் தொற்­று­வ­தனை தடுக்கும் பொருட்­க­ளையும் நீதி­மன்றில் சமர்ப்­பித்து வந்­தனர். குறிப்­பாக கட்­டாக்­கா­லிகள் தொடர்­பி­லான கட்­டளைச் சட்­டத்தின் கீழ் பொலிஸார் இத்­த­கைய பாலியல் தொழிலில் ஈடு­படும் பெண்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து வந்த நிலை­யி­லேயே அவற்­றிற்­கான வழக்குப் பொருட்­க­ளாக இவ்­வாறு ஆணு­றைகள் உள்­ளிட்­டவை பாலியல் தொழிலில் ஈடு­பட்­ட­தாக நிரூ­பிக்கும் நோக்கில் இந்த பொருட்கள் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. 

சுகா­தார அமைச்­சினால் இந்த பொருட்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தனால் இவற்றை வைத்­தி­ருப்­ப­தற்கு எவ்­வித தடையும் கிடை­யாது. எனவே ஆணு­றைகள் மற்றும் பால்வினை நோய்களை தடுக்கும் பொருட்களை தடயப் பொருட்களாக மன்றில் சமர்பிப்பதை தவிர்க்குமாறு தலைமையகம் அறிவித்து ள்ளதாக அறியமுடிகிறது.

No comments

Powered by Blogger.