Header Ads



குறைந்த விலையில் மீன்களை, விநியோகிப்பதற்கான நடமாடும் சேவை


பொது  மக்களுக்கு குறைந்த விலையில் மீன்களை விநியோகிப்பதற்கான நடமாடும் சேவையினை கடற்றொழில் கூட்டுத்தாபனம் நேற்று (27) ஆரம்பித்துள்ளது.

இத்தினங்களில் தெற்கு உள்ளிட்ட கடற்பரப்புகளில் அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த சேவையினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக டற்றொழில் மற்றும் நீரியல்வள  அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மீன் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு நொந்தமான லொறிகளில் பொதுமக்கள் குறைந்த விலையில் மீன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சேவையானது கிரிபத்கொட, கல்கிஸ்ஸை, செத்சிறிபாய, மாளிகாவத்தை, புறக்கோட்டை, கம்பஹா,தலவாக்கலை,கம்பொல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.

1 comment:

  1. Hope President and animal rights group will band load in fish and transporting around the country...Fish too have life like cows .. Do not they have sense to understand? They love cows but not fish and chiken

    ReplyDelete

Powered by Blogger.