Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக, நாடுமுழுவதும் பாரிய கண்டனப் பேரணிகள்


யு.எல்.எம். றியாஸ் 

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் பல்​வேறு பகுதிகளில் இன்றும்(08) ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலின் முன்றலில்  விசேட  துவாப்பிராத்தயுடன் ஹிஜ்ரா சந்தியில் இருந்து ஆரம்பமான கண்டனப் பேரணி பொலிஸ் வீதியூடாக பிரதேச செயலகத்தை சென்றடைந்ததது.

ஆர்பாடடத்தில் "மியன்மார் அரசே சொந்த நாட்டுமக்களை கொல்வதை நிறுத்து " ,உலக நாடுகளே மியன்மார் படுகொலைகளை  நிறுத்துங்கள், அப்பாவி மக்களை கொண்றுகுவிக்காதே,, போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாடுடத்த்தில்   கலந்துகொண்டனர்.

இதன்போது   ரோஹிங்யா முஸ்லிகள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலைக் நிறுத்தக் கோரியும், இலங்கை அரசு இத்தாக்குதலைக் நிறுத்துவதற்கு உலக நாடுகளுக்கு அழுத்தங்கங்களைக் கொடுக்கக் கோரியும் சம்மாந்துறையின் உயர சபைகளினால்  பிரதேச செயலாளாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்ட்து.

இதுபோன்று நாட்டின் இன்னும் பல பிரதேசங்களிலும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றுள்ளன.


1 comment:

  1. இப்படியான முயற்சியில் ஈடுபடுவதோடு முஸ்லிம்கள் பாவங்களை விட்டும் தௌபா செய்து அதிகமாக துஆ ,இஸ்திஹ்பாரில் ஈடுபட வேண்டும். நிலைமை சுமூகமாக, அமைதியாக இருக்கும் போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் இருந்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
    அல்லாஹ் பாதுகாப்பானாக.

    ReplyDelete

Powered by Blogger.