Header Ads



பரம ரகசியம் பேணிய சந்திரிக்கா, பிரதமர்கூட அறிந்திருக்கவில்லை

இலங்கையில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் பரம ரகசியமாக பேணப்பட்டு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதான முயற்சிகளில் ஈடுபடுமாறு எமக்கு விடுத்த அழைப்பை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யாருக்கும் பகிரங்கப்படுத்தவில்லை.

அதுபற்றி கொழும்பில் இரண்டு பேருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஒருவர் சந்திரிகா குமாரதுங்க. மற்றவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்த இரகசியம் பேணப்பட்டது. அதற்குப் பின்னரே பகிரங்கப்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது முதலாவது சந்திப்புத் தொடர்பாக, அப்போதைய இலங்கை பிரதமர் கூட அறிந்திருக்கவில்லை என எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.