Header Ads



ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் இலங்கையர்களுக்கு, அமைச்சர் ஹலீமின் வேண்டுகோள்

அல்லாஹ்வின் அருளால் புனித மக்காவிலிருந்து மினா மற்றும் அரபா நோக்கி பயனமாக ஆயத்தமாகும் ஹாஜிகளுக்கு நாட்டின் சுபீட்சத்திற்கும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும், முஸ்லிம்களின் சொத்துகளின் பாதுகாப்பிற்காகவும், சூழ்ச்சிக்காரர்களின் திட்டங்கள் தோல்வியடைய செய்து மக்கள் சகவாழ்வுடன் சுபீட்சமாகவும் வாழவும் பிரார்த்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். 

மேலும் சில முகவர்களின் தவறுகளினால் கடைசி நிமிடத்தில் ஹஜ்ஜில் கலந்துகொள்ள முடியாமல் போன சகோதர சகோதரிகளுக்காகவும் அதன் பயனை அடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறார். 

நேற்றுதமது 80ஆவது வயதில் மறைந்த முன்னாள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த நெடுங்காலம் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய அல்ஹாஜ் AHM  அஸ்வர் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனவாதியாக ஆகவும், ரோஹிங்கியாவில் அவதிப்படும் முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.