Header Ads



'இறுதிநேர ஹஜ் முகவர்களிடம் ஏமாறாதீர்கள்' - முஸ்லிம் அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இறுதிநேர ஹஜ் முகவர்களிடம் ஏமாந்துவிட வேண்டாமென முஸ்லிம் சமய விவகார அமைச்சு, இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஹஜ் குழுவின் உறுப்பினரும், முஸ்லிம் சமய விவகார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான பாஹிம் சற்றுமுன்னர் தகவல் தருகையில்,

முஸ்லிம் சமய விவகார  அமைச்சர் ஹலீம், சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானிடம் இலங்கைக்கு மேலதிக 600 ஹஜ் கோட்டாக்களை தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் இலங்கைக்கு அந்த மேலதிக 600 ஹஜ் கோட்டாக்களும் கிடைத்துவிட்டதாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவிடமிருந்து இந்தத் தகவல் இதுவரை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை. எனவே முகவர் நிலையங்களின் விளம்பரங்களை பார்த்து ஏமாந்து, முற்பணமோ அல்லது முழு ஹஜ்ஜுக்குரிய கட்டணத்தையோ முகவர் நிலையங்களிடம் செலுத்த வேண்டாமென நாம் பொறுப்புடன் கோருகிறோம்.

அவ்வாறு முகவர் நியைங்களிடம் பணம் கொடுத்து ஏமாறுமிடத்து, அதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு, எந்தவகையிலும் பொறுப்பில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதேவேளை சவூதி அரேபியா, எமக்கு அந்த மேலதிக 600 ஹஜ் கோட்டா வழங்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தால், முஸ்லிம் சமய விவகார அமைச்சானது உடனடியாக அதனை இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவிக்க ஆயத்தங்களை செய்து, தயார் நிலையில் இருப்பதாகவும் பாஹிம் உறுதிபட தெரிவித்தார்.

1 comment:

  1. The ministry knows very well that the Haj organisers are doing blunders. By knowing very well still the ministry is go behind them for reasons not known to us.

    It is the time for the government and the ministry to get this pilgrimage organised by a regulatory body in order to avoid this irregularity and to safeguard the pilgirimagers.

    ReplyDelete

Powered by Blogger.