Header Ads



3,500 ரூபா செலுத்தாத கபீர் - வீட்டு நீர் விநியோகம் துண்டிப்பு

கொழும்பு லேன் ட்ரைவில் அமைந்­துள்ள அமைச்சர் கபீர் ஹாசிமின் வீட்டின் நீர் கட்­டணம் செலுத்­தப்­ப­ட­வில்லை என தெரி­வித்து நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை அதி­கா­ரிகள் நீர் விநி­யோ­கத்தை துண்­டித்து சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நீர் விநி­யோ­கத்தை துண்­டிப்­ப­தற்­காக அதி­கா­ரிகள் அமைச்­சரின் வீட்­டுக்கு சென்­றி­ருந்த வேளையில் அங்­கி­ருந்த பணியாள் ஒருவர் நீர் கட்­டண நிலுவை தொடர்பில் தமக்கு எவ்­வித அறி­வித்­தல்­களும் அனுப்­பப்­ப­ட­வில்­லை­யென தெரி­வித்­துள்ளார்.

அதன்­போது வீட்­டினுள் அலு­வல்கள் தொடர்­பான கூட்டம் ஒன்றில் பங்­கேற்­றி­ருந்த அமைச்சர் கபீர் ஹாசிம், குறித்த ஊழி­யரை அழைத்து அதி­கா­ரிகள் தெரி­விக்கும் நி‍லுவைத் தொகை­யான 3,500 ரூபாவை அவர்­க­ளிடம் செலுத்­தி­விட்டு அதற்­கான பற்­றுச்­சீட்­டினை 30 நிமி­டங்­க­ளுக்குள்  பெற்­றுக்­கொள்­ளு­மாறு தெரி­வித்­துள்ளார்.

எனினும், 30 நிமி­டங்­க­ளுக்குள் பற்­றுச்­சீட்டை வழங்­கு­வ­தற்கு  மறுப்பு தெரி­வித்த நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை அதி­கா­ரிகள் குழுவின் தலை­மை­ய­தி­காரி, அமைச்சர் என்­ப­தற்­காக தங்­க­ளுக்கு அத்­த­கை­ய­தொரு வரப்­பி­ர­சாதம்  வழங்­கப்­ப­ட­வில்லை என தெரி­வித்து நீர் விநி­யோ­கத்­தினை துண்­டித்­துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­விக்­கையில், அரச ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­பதே எனது கொள்­கை­யாகும் என தெரி­வித்தார்.

அத்­துடன் தான் அமைச்சர் என்­பதை விட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்தாபிப்­ப­தற்­காக வாழ்க்­கையில் போரா­டி­ய­மைக்­கான பாராட்­டாக இத்­த­கைய அரச ஊழி­யர்­களின் செயற்­பா­டு­களை கரு­து­வ­தாக தெரி­வித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்­ச­ரொ­ரு­வ­ருக்கு எதி­ராக கருத்து தெரி­விப்­ப­தற்கு கூட அரச ஊழி­யர்­க­ளுக்கு இய­லாமல் இருந்­தது, எனினும் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அரச ஊழியர் மிகவும் சீராக நடத்­தப்­ப­டு­கின்­றனர் என்­ப­தற்கு எடுத்­து­காட்­டாக இந்­த­வொரு சம்­பவம் போது­மா­னது என தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் இந்த சம்­ப­வத்­தினால் அமைச்சர் என்ற ரீதியில் தான் எந்தவொரு அசெளகரியத் துக்கோ, வருத்தத்துக்கோ உள்ளா கியிராத போதிலும் சாதாரண குடி மகனாக இதனை நோக்குமிடத்து வருத்தப் படவேண்டிய சம்பவ மொன்றாக இது உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.