Header Ads



முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி, ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்

(விடிவெள்ளி)

இலங்கை முஸ்­லிம்கள் மீது கோட்டே மகா சங்க சபை­யினர் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலை­யினைக் கண்­ட­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும்.

இதற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­திக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம். எம்.யாசீன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகா­நா­யக்க தேரர் இத்­தே­பான தாம்­மா­லங்­கார அவர்­களின் கையொப்­பத்­துடன் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்ட மகஜர் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே வக்பு சபையின் தலைவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்;

“கோட்டே மகா சங்க சபை­யினர் இலங்­கையில் வாழும் சகல இனங்­க­ளுக்கு இடை­யிலும் மதங்­க­ளுக்கு இடை­யிலும் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் மற்றும் முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களை அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்­ப­தற்­காக புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இது வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இதே­வேளை அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் மீது பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளமை ஏற்றுக் கொள்­ளத்­தக்­க­வை­யல்ல. சிங்­கள தேசி­ய­வாதக் கொள்­கையை நிலை நிறுத்திக் கொள்­வ­தற்­கா­கவே இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர்.

எம்­மீது முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. எம்மால் ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று முஸ்­லிம்­க­ளான நாம் வாதிட்டுக் கொண்­டி­ருப்­ப­தை­விட  அது சட்ட ரீதி­யான ஒரு நிறு­வனம் மூலம் கூறப்­பட வேண்டும். இத­னா­லேயே இக் குற்­றச்­சாட்­டு­களை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்­ட­றிய சுயா­தீன ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென வக்பு சபை வலி­யு­றுத்­து­கி­றது.

பெரும்­பான்­மை­யின பேரி­ன­வா­திகள் நாம் கண்ட இடங்­க­ளி­லெல்லாம் பள்­ளி­வா­சல்கள் மற்றும் மத்­ர­ஸாக்­களை நிர்­மா­ணிக்­கிறோம் என்று குற்றச்  சுமத்­து­கி­றார்கள். இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களால் பெரும்­பான்மை மக்கள்  முஸ்­லிம்­களைத் தவ­றாக எண்­ணு­கி­றார்கள். முஸ்­லிம்கள் தீவி­ர­வா­திகள் என்று கரு­து­கி­றார்கள்.

முஸ்­லிம்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மிக்க வந்­த­வர்கள் என்ற கருத்து மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது. இதனைப் பொய்­யென நிரூ­பிக்க ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிப்­பது அவ­சி­ய­மாகும் என்றார்.

கோட்டே மகா­சங்க சபையின் தேரர்கள் முஸ்­லிம்கள் பௌத்த மதத்­த­லங்­க­ளையும் புத்தர் சிலை­க­ளையும் அழிக்­கி­றார்கள். தங்கள் சனத்­தொ­கையை வேக­மாக அதி­க­ரித்துக் கொள்­கி­றார்கள்.

போதைப் பொருட்­களை நாட்­டுக்குள் கொண்டு வரு­கி­றார்கள். பௌத்­தர்­களை மதம் மாற்றுகிறார்கள். தொல்பொருள் பிரதேசங்களில் அத்துமீறி பிரவேசித்து தொல் பொருட்களை அழிக்கிறார்கள்.

வில்பத்து வன பிரதேசத்தை அழிக்கிறார்கள். முஸ்லிம் அடிப்படைவாதம் காலூன்றி வருகிறது. எனும் முறைப்பாடுகளை மகஜர் மூலம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.