Header Ads



இலங்கையில் நாளை ரமழான், தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நாளை வெள்ளிக்கிழமை (26) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 6.22 மணி முதல், புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்குமாறும், தலைப்பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 011 5234044, 011 2432110, 077 7316415  ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது 011 2390783 என்ற தொலை நகல் ஊடாகவோ அறியத்தருமாறும், சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுள்ளது. 

1 comment:

  1. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
    (அல்குர்ஆன் : 2:185)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.