May 11, 2017

அரபுக் கல்­லூ­ரி­க­ளைப்­ பற்­றிய பிற மதத்­த­வர்­களின், சந்­தே­கங்­களை மாற்­றி­ய­மைக்கலாம் - அகார் முஹம்மத்

-விடிவெள்ளி-
இலங்­கையிலுள்ள அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கென ஒரு பொது­வான பாடத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் அரபுக் கல்­லூ­ரி­க­ளைப்­பற்­றிய பிற மதத்­த­வர்­களின் வீணான சந்­தே­கங்­களை மாற்­றி­ய­மைக்க முடியும்.

இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றது. அரபுக் கல்­லூ­ரி­களில் பயங்­க­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டை வீணாக முன்­வைத்­துள்­ளனர். இந்த தப்­பான அபிப்­பி­ரா­யத்தை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என ஜாமிஆ நளீ­மியா கலா­பீட பிரதிப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத் (நளீமி) கூறினார்.

பேரு­வளை, சீனன்கோட்டை ஜாமிஆ நளீ­மியா கலா பீட ADRT மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற இலங்­கையில் உள்ள அரபுக் கல்­லூ­ரி­களின் பாடத்­திட்­டத்தை ஒருமுகப்­ப­டுத்தல் மற்றும் மேம்­ப­டுத்தல் தொடர்­பான ஆரம்ப செய­ல­மர்வில் விசேட பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு கூறினார். முஸ்லிம் சமய, கலா­சாரத் திணைக்­களம் ஏற்­பாடு செய்த இச் செய­ல­மர்வில் சுமார் 50 பேர் வரை­யி­லான உல­மாக்கள் பங்­கு­பற்­றினர் அதில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஆறு தசாப்தகால வர­லாற்றில் இன்­றைய செய­ல­மர்வு மிகவும் வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகும். நீண்டகால முயற்­சியை அறு­வடை செய்யும் சந்­தர்ப்­பத்தை நாம் அடைந்­தி­ருக்­கின்றோம். கடந்த காலத்தில் எடுக்­கப்­பட்ட முயற்­சி­களின் விளை­வாக நாம் அனை­வரும் ஒன்றுகூடி சிறந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும். வர்­ஹதா, முத­வக்­கி­தா­வுக்­கான ஒரு பாடத்­திட்­டத்தை தயா­ரித்து அந்தப் பாடத்­திட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இப்­போது அமு­லுக்கு வந்து பரீட்சைத் திணைக்­களம் தொடர்ந்தும் பரீட்­சை­களை நடாத்தி வரு­கின்­றது.

அதனைத் தொடர்ந்து தான­வி­யா­வுக்­கான பாடத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்டு அந்­தப்­பாடத் திட்­டமும் அரச அங்­கீ­கா­ரத்தைப் பெற்று பரீட்சை திணைக்­க­ளத்­தினால் இப்­போது அது அமுல் நடத்­தப்­பட்டு பொதுப் பரீட்சை வெற்­றி­க­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. இப்­போது நாங்­களே தயா­ரித்த மர்­ஹதா ஜாமி­ஆ­வுக்­கான பாடத்திட்டம் இருக்­கி­றது.

அந்தப் பாடத்­திட்­டத்தை தயா­ரிக்­கின்ற குழுவைச் சேர்ந்த பலரும் இங்­குள்­ளனர். அந்தப் பாடத்திட்­டத்தை மூன்றாம் கட்­ட­மாக நாங்கள் தயா­ரித்தோம். அது பல்­க­லைக்­க­ழகத் தரத்­தினைக் கொண்ட ஒரு பாடத்­திட்­ட­மாகும். என்­றாலும் அது தொடர்­பான நடை­முறைப் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. பரீட்சைத் திணைக்­களம் ஒரு நாளும் ஒரு பட்­டச்­சான்­றி­தழை வழங்­காது. அப்­ப­டி­யாக இருந்தால் இந்தப் பாடத்­திட்­டத்­துக்கு நாங்கள் உயர் கல்வி அமைச்சு ஊடாக பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவின் அரச அங்­கீ­காரம் பெறப்­பட வேண்டும். மர்­ஹதா ஜாமிஆ என்று வைக்­கப்­பட்­டுள்ள பெயரை வேண்­டு­மானால் மாற்றிக் கொள்­ளலாம். இது பிரச்­சி­னை­யல்ல.

இப்­போது நமக்கு முன்­னா­லுள்ள தேவை என்­ன­வென்றால் அரச அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­ளத்­தக்க ஒரு பொதுப்­பா­டத்­திட்டம்,  இறு­தி­யாண்டு மாண­வர்­க­ளுக்­கான பாடத்­திட்ட முமாகும். இவர்கள் உல­மாக்­க­ளாக, மௌல­வி­மார்­க­ளாக, சேஹ்­மார்­க­ளாக அரபுக் கலா­சா­லை­க­ளி­லி­ருந்து பட்டம் பெற்று வெளி­யே­று­கின்­ற­போது மத்­ர­ஸா­வு­டைய சான்­றி­தழை அவர்கள் எடுத்துச் செல்லும் அதே நேரத்தில் அரச அங்­கீ­காரம் பெற்ற ஒரு தரம்­மிக்க சான்­றி­த­ழையும் பெற்­றுச்­செல்­வார்கள்.

இலங்­கையில் உள்ள உல­மாக்­களே இன்று முழு உல­கிற்­கும் முன்­மா­தி­ரி­மிக்­க­வர்­க­ளாக திகழ்­கின்­றனர். உல­மாக்கள் ஒரு ஜமாஅத் அமைப்­பிலோ தரீக்கா அமைப்­பிலோ அல்­லது இயக்க அமைப்பில் இருந்­தாலும் இவர்கள் அனை­வ­ரி­னதும் கண்­களும் உம்­மத்தின் பக்­கமே உள்­ளன. உம்­மத்துல் வாஹிதா என்­பதே எம் அனை­வ­ரி­னதும் கோட்­பா­டாகும்.

அதன் கார­ண­மா­கவே நாம் அனை­வரும் பாடத்­திட்­டத்தை ஒருமுகப்­ப­டுத்தும் பணியில் எல்லா கருத்து முரண்­பா­டு­களை  விட்டு விட்டு வந்­துள்­ளீர்கள். இந்த நிலையை பாக்­கிஸ்­தானில், இந்­தி­யாவில், பங்­க­ளா­தேஷில் காண­மு­டி­யாது. இந்த வகையில் இலங்கை உல­மாக்கள் முழு உல­கிற்கும் ஒரு முன்­மா­தி­ரி­யா­ன­வர்­க­ளாக உள்­ளனர்.

3 கருத்துரைகள்:

Yes we appreciate sheik agar

Exactly Arabic colleges have to go long way to do this...
There are more than 10.000 Arabic colleges in Indian subcontinent..most of them are like cleric making machines..
They do not know have access to world knowledge that they live in ? It is high time to think about its structure, syllabi, it's teaching methods, it's Misson and vision ..its products..
No point in talking about it ..change is needed

Post a Comment