Header Ads



இந்துவின் உடலை புதைக்க வசதியில்லை - கைக்கொடுத்து பிணத்தையும் சுமந்த இஸ்லாமியர்கள்


இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் சிலர், பிணத்தை சுமந்தபடி, சென்ற சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பிஸ்வஜித் ரஜக். இவர் நேற்று -25- இரவு உயிரிழந்தார். பிஸ்வஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது பெற்றோரிடம் பணமோ, ஆட்கள் உதவியும் இல்லை. இதனால் அவரது பெற்றோர் இரவு முழுவதும், மகனின் உடலுடன் அழுதபடி அமர்ந்திருந்தனர். இன்று (ஏப்.26) காலை விஷயம் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிலர், அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.

பிஸ்வஜித்தின் உடலை சுமந்து செல்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்து வந்த அவர்கள், 8 கி.மீ., தொலைவில் உள்ள மயானத்திற்கு தாங்களே தோளில் சுமந்து சென்றனர். மேலும் இந்து மத முறைப்படி, இந்துக்களின் மந்திரங்களையும் உச்சரித்தபடி சென்றனர். சேக்புரா கிராமம் இஸ்லாமியர் அதிகம் வாழும் பகுதி. இந்த கிராமத்தில் இந்து குடும்பங்கள் 2 அல்லது 3 மட்டுமே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய தலைவர் ஒருவர், இதை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. கடும் ஏழ்மையையும் தாண்டி ஒற்றுமைக்கு உதாரணமாக இந்த கிராமம் விளங்குகிறது. இந்துக்களும், இஸ்லாமியர்களும் இரு பிள்ளைகளை போன்று உள்ளனர். மற்ற எல்லாவற்றையும் விட நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். மனிதநேயம் தான் முக்கியம் என்றார்.

தினமலர்

26-04-2017

2 comments:

  1. நல்லது , சுமந்து செல்லலாம் ஆனால் மந்திரம் சொல்லத் தேவை இல்லை . ஈமானை எம்முறையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது .

    ReplyDelete
  2. மந்திரம் எதற்காக சொல்ல வேண்டும்,கடமையை மட்டும் செய்தால் போதும்,

    ReplyDelete

Powered by Blogger.