Header Ads



சம்மாந்துறையில் முஸ்லிம் பாடசாலையில் அமெரிக்கா அமைக்கும், கட்டிடத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு

-யு.எல்.எம். றியாஸ்-

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயல மாணவர்கள் அப்பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் அனர்த்த முகாமைத்துவ  கட்டிடத்தை அகற்றி வேறு ஒரு இடத்திற்கு மாற்றுமாறு கோரி இன்று -19-  பாடசாலைமுன்பாக கவன ஈர்ப்பு நடவடிக்கையில்   ஈடுபட்டனர்

ஐக்கிய அமெரிக்க மனிதாபிமான உதவித்திடடத்தின் கீழ் சுமார் 8 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ள இக் கட்டிடம் பாடசாலை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளது
ஐக்கிய அமெரிக்க இராணுவ பொறியியலாளர் பிரிவின் மனிதாபிமான உதவித்திடடத்தின் கீழ் எதிர் காலங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் போது அவ் அனர்த்தத்தினால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்கில் இக் கட்டிடம்  நிர்மாணிக்கப்பட்ட உள்ளது
இக்கட்டிடம் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்படுவதை தடுக்கக் கோரியும் இப் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தருமாறு கோரியும் சம்மந்தப்படட அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரியே  மாணவர்கள் கவன  ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


4 comments:

  1. இது தேவையில்லாத ஆர்ப்பாட்டம் அமெரிக்கா எப்போதுமே வாரிய நாடுகளுக்கு உதவி செய்கின்றன இப்படி அறபடிச்சவங்கள் இருக்கின்றார்கள் என்றால் இனி உதவிகள் கிடைச்ச மாதிரி தான்!!

    ReplyDelete
  2. Hello Bullbull......dont think like bulbul
    They are asking their own ground and say to do the construction in another place....
    So, understand first before writing any comments

    ReplyDelete
  3. Hello Salah!.....Yes read the news paper first.This people if have any problem that must solve very peacefully not this way demostration.This peoples are always think America bad bad but reality not all case.

    ReplyDelete

Powered by Blogger.