Header Ads



மியன்மார் திருவிழாவில் 285 பேர் பலி, 1,073 பேர் காயம்


மியன்­மாரில் நடை­பெற்ற தண்ணீர் திரு­வி­ழாவில், 285 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 1,073 பேர் காய­ம­டைந்­துள்ளனர்.

மியன்­மாரில் புத்­தாண்டு திரு­நாளை முன்­னிட்டு, பல்­வேறு கொண்­டாட்­டங்­க­ளுக்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதற்­காக 5 நாட்கள் விடு­முறை விடப்­பட்­டது. அதில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் அடித்து விளை­யாடும் தண்ணீர் திரு­வி­ழாவும் அடங்கும்.

அவ்­வாறு செய்­வ­தன்­மூலம் தங்கள் மீதான பாவங்கள் நீங்கும் எனவும், குறைகள் போக்­கப்­பட்டு புதிய வாழ்வு மலரும் எனவும் நம்­பு­கின்­றனர். இந்த ஆண்டு புத்­தாண்டு கொண்­டாட்­டங்­களில் பொது­மக்கள் மிகுந்த மகிழ்ச்­சி­யுடன் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில், கடந்த வியா­ழக்­கி­ழமை தொடக்கம் ஞாயிற்­றுக்­கி­ழமை வரை 4 நாட்­க­ளாக  தண்ணீர் திரு­விழா கொண்­டாட்­டத்­தின்­போது ஏற்­பட்ட விபத்­துக்­களால், 285 பேர் மியன்மாரின் பல பாகங்களிலும் உயி­ரி­ழந்­தனர்.

யாங்கூன் பகு­தியில் 44 பேரும், மண்­டாலே பகு­தியில் 36 பேரும் நய் பி டோ பகுதியில் 10 பேரும் சகைங் பகுதியில் 26 பேரும் தனின்­தர்யி பகு­தியில் 11 பேரும் பகோ பகுதியில் 37 பேரும் மக்வே பகுதியில் 11 பேரும் மொன் மாநிலத்தில் 20 பேரும் ரகின் பகு­தி யில் 17 பேரும் ஷன் மாநிலத்தில் 29 பேரும் அயெ­யா­வட்டி பிராந்தியத்தில் 28 பேரும் இறந்துள்ளனர்.

அதே­நேரம் கொலை, கார் விபத்து, போதைப் பொருள் பயன்­பாடு, ஆயு­தங்கள் பயன்­பாடு, கல­வரம் என 1,200 வழக்­குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்தில், 272 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,086 பேர் படுகாயமடைந்தனர்.

4 comments:

  1. "முஸ்லிம்களை கொன்றவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை" அப்டீன்னு ஒரு கொமன்டையும் காணோமே.... அப்போ யாரைக் கொன்றதற்காக முஸ்லிம்களை உலகில் அதிகம் அதிகம் மரணிக்க செய்து அல்லாஹ் தண்டிக்கின்றான்?

    ReplyDelete
  2. Look like dangerous people living in Miyaar.

    ReplyDelete
  3. Mr.Noordeen அவரகளே;உங்களின் கேள்வியோடு அமைந்த பின்னூட்டம் நீங்கள் ஒரு முஸ்லிமா அல்லது அந்த பெயரில் உலாவும் வெளிச்சமா என்ற கௌள்வி எழுகின்றன.முஸ்லிம்கள் அனியாயமாக கொல்லப்படும் இக்காலத்ல் இவ்வாறான கொடியவர்களுக்கு சில சோதிப்பு தண்டனையை கொடுப்பது ஒரு படிப்பினையாகவே அமையும்.இந்த விடயத்தில்,நாம்பெருமைப்படா விட்டாலும் அங்கு பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து யோசனை செய்தான் புரியும் .அநியாயமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் ,அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்படுகின்றார்கள்,இந்த அநீதியை தட்டிக் கேட்க தகுயற்றுப்போய் இருக்கும் நம் சமூதாயம் அநியாயக்காறனுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக பின்னூட்டங்கள் எழுதுவது ஒரு தரங்கெட்ட செயல்,என்பது மட்டுமல்லாமல் முஸ்லீம்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியை கொச்சைப்படுத்தும் விதமாகவே இருக்கிறது,வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நம்மவார்கள் இருக்கும் வரை இந்த சமூதாயம் தலை நிமிர்வது கடினம்,வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அம்முஸ்லீம் பச்ச பாலகர்கள் என்ன குற்றம் செய்தார்கள்,கடைசி நிலை என்ன என்பது இந்த உலகம் அறிந்து கொண்டது.கொல்லப்படும் முஸ்லிம்கள் ஷஹீதுகளுடைய அந்தஸ்தை பெறலாம் ஆனால் அநியாயகாறனின் முடிவு அதி பயங்கரமானதாகவே இருக்கும்,

    ReplyDelete
  4. Bro. Noordeen
    அது அல்லாஹ்வின் தண்டனையல்ல. சோதனை அதில் பொறுமை காப்பவர்களுக்கு மறுமையில் வெகுமதி. இன்ஷா அல்லாஹ்
    வெறும் பெயர் தாங்கி முஸ்லிமாக இல்லாமல் இஸ்லாத்தை உருப்படியா .கற்று கடைபிடிக்க முயற்சியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.