Header Ads



முஸ்­லிம்­ கடைகள் மீது குண்டு தாக்­கு­த­ல் - குற்றவாளிகளை பிடிப்பதில் பொலிஸார் மும்முரம்

நேற்று முன்தினம் அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

சம்­பவம் அறிந்து ஸ்தலத்­துக்கு விரைந்த அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

பெற்றோல் நிரப்­பப்­பட்ட போத்­த­லொன்று வெடிக்­காத நிலையில் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் கைவிரல் அடை­யா­ளங்­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அரு­கி­லுள்ள பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களின் சி.சி.ரி.வி கமரா பதி­வுகள் பொலி­ஸாரால் பெறப்­பட்­டுள்­ளன.

போர்வை நகரில் நேற்று பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்­பவம் அறிந்­ததும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவைத் தொடர்பு கொண்டு போர்­வையில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை நிறுத்­து­மாறும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கும் படியும் கோரிக்கை விடுத்­துள்ளார். 

முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தாம­த­மின்றி கைது­செய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­மாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகுல ரத்­நா­யக்க பொலிஸ்மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கவின் உத்­த­ர­வி­னை­ய­டுத்து அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் அரு­கி­லுள்ள பள்­ளி­வாசல் மற்றும் பெரும்­பான்னை இனத்­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யத்தின் சி.சி.ரி.வி கமரா பதி­வு­களை பெற்று விசா­ர­ணை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

விரைவில் இத்­தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை கைது செய்யமுடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

சம்­பவம் தொடர்பில் கொடப்­பிட்­டிய மத்­ரஸா மற்றும் மக்தப் பொறுப்­பாளர் பௌசுல் கரீம் கருத்து தெரி­விக்­கையில்;

ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 1.30 மணி­ய­ள­விலே முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இத்­தாக்­குதல் கார­ண­மாக ஒரு தொலை­பேசி கடை, ஹோட்டல் ஒன்று பழ­வ­கைகள் விற்­பனை நிலையம், என்­பன தீப்­பற்றி சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. மற்­று­மொரு விற்­பனை நிலை­யத்­துக்கு எறி­யப்­பட்ட பெற்றோல் குண்டு வெடித்துச் சித­றாது பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டது.

போர்வை பகு­தியில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இன சிங்­க­ள­வர்­களும் நீண்ட கால­மாக எது­வித பிரச்­சி­னை­யு­மின்றி ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள்.

இங்கு 500 முஸ்லிம் குடும்­பங்கள் வாழும் நிலையில் சூழ பெரும்­பான்மை மக்­களே வாழ்­கி­றார்கள். இப்­ப­கு­தியில் ஒற்­று­மை­யுடன் வாழும் இரு சமூ­கத்­துக்கும் இடையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்ட சதியே இது. இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைத் தேடிப்­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்­டு­மென்றே இப்­ப­குதி பன்­ச­லை­களின் தலைமை தேரர்கள் வேண்­டுகோள் விடுக்­கின்­றனர். 

போர்வை பள்­ளி­வா­சலில் அமைந்­துள்ள சியா­ரத்தைப் பார்­வை­யிட அதி­க­மான சிங்­கள மக்கள் வரு­கி­றார்கள். இதனால் இரு இனங்­க­ளுக்­கி­டை­யிலும் ஒற்­றுமை நிலவி வரு­கி­றது. சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதில் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

தென் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். போர்வை பள்ளிவாசல் சி.சி.ரி.வி கமராவிலும் தாக்குதல் தொடர்பான பதிவுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.