Header Ads



800,000 இலங்கையர்கள் மன அழுத்தத்தினால் பாதிப்பு

சுமார் 800,000 இலங்கையர்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் மத்தியில், மன அழுத்தங்கள் அதிகரிப்பதனை புரிந்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய பங்கை ஊடகங்கள் கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து மீட்பதற்கு உதவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வயது வந்தவர்கள் மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை, பசியின்னை மற்றும் உடல் எடை குறைதல் போன்ற நிலையில் உள்ளார்கள் என களுபோவில போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவர் மலிக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மாறாக, இளம் பருவத்தினருக்கு அதிகப்படியான தூக்கம் மற்றும் பசியின்மை (குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்) உடல் எடையை அதிகரிக்க முன்னணி காரணமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மனசோர்வு தொடர்பில் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு அதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் முக்கியமான விடயமாகும் என அவர் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் சுமார் 8,000 நோயாளிகள் முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவனங்களில் அனுமதிக்கப்படுவதாகவும், 1000 பேர் வீட்டில் நீண்டகால சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.