Header Ads



எர்துகானும், அஸாதுதீனும் நமதுநாட்டு முஸ்லிம் தலைவர்களும்..!

-அப்துல் பாஸித்-

உலக வரலாற்றில் முதல் அரசியல் சாசனம் "ஹுதைபிய்யா உடன்படிக்கை" எழுதப்பட்டது கண்மணி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , எனும் உன்னத தலைவரினால்.

இன்றும் உலக வரலாறு பேசும் ஒரு அரசியல் தலைமை "உமர் இப்னு கத்தாப்  (றழி ),

இவ்வளவு ஏன், இன்றய உலகில் ஈமான் ஆட்சி செய்யும் ஒரு இடம்தான் துருக்கி, ஒரு இஸ்லாமிய தலைமை எவ்வாறு இருக்கும் என்பதன் கண்கூடான  உதாரணம் அந்த ஏர்தர்கான்.

எமது அயல் நாட்டு இந்தியாவில் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்திட்கும் அஞ்சாது குரல் கொடுக்கும் ஒரே பாராளுமன்ற பிரதிநிதி "உவைஸி".

ஈமானிய தலைமைகளின் சில எடுத்துக்காட்டு.

எமது நாட்டிலும் சிறந்த ஈமானிய முஸ்லிம்கள் வாழ்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ். ஆனால் எம் சமூகத்தை பிரதிநிதிப்படுத்த எதனை அரசியல் தலைமைகள் உள்ளன சகோதரர்களே????

எமது உரிமைகள் பற்றி பேச பாராளுமன்றில் யார் உள்ளார்?

எமது மார்க்கம் பற்றி, எமது ஷரீயா சட்டம் பற்றி பிற மத சகோதரர்கள் பிழையான புரிதல்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வெய்க்கும் பொழுது, அல்குரான் , அல்ஹதீத் துணையோடு அவர்களிட்கு தெளிவூட்டும் தகமை கொண்ட எம் தலைமை யார் சகோதரர்களே???? அந்த அளவிட்கு எமது மார்க்க அறிவும், சிறந்த ஈமானும், கொண்ட தலைமை யார்?

எமக்கு தேவை அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற பிரதிநிதிகளா? அல்லது அதிக ஈமானோடு கூடிய பாராளுமன்ற பிரதிநிதியா???? எண்ணிக்கை தான் முக்கியம் என்றால் பத்ரு போரில் நாம் எவ்வாறு வென்றிருக்க முடியும் சகோதரர்களே??? ஊருக்கொரு எம்பி எடுத்தோமே, எம் சமூகத்திட்கு எதனை எம்பிகளை எடுத்துக்கொண்டோம்????

அன்பர்களே, எப்பொழுதும்  முஸ்லீம் (பெயர் தாங்கி) தலைமைகளை குற்றம் சுமத்துகின்றோமே, உண்மையில் குற்றம் செய்தது யார்? உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்.

மேலே குறை கூறப்படும் பிரதிநிதிகள் பாராளுமன்றம் வந்ததன் பிட்பாடுதான் இவ்வாறு மாறியவர்கள் அல்லர், அவர்களின் வாழ்க்கை வரலாறு முழுவதும் பொய், பித்தலாட்டம், களவு, கொள்ளை , மது, மாது,... போன்ற பஞ்சமா பாதக செயல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவற்றினை தெரியாது நாம் அவர்களை எமது பிரதிநிதியாய் ஆக்கவும் இல்லை,  நன்றாக தெரிந்திருந்தும் தெரியாதது போன்று நடித்துக்கொண்டுதான் நாம் அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்தோம்.

எனவே இப்பொழுது கூறுங்கள் குற்றவாளி நாமா? அவர்களா??

நாமளித்த வாக்குகள் வெறும் வாக்குகளல்ல, எம் சமூகத்தின் உன்னதமான தலைமைப்பொறுப்பிட்கு யார் பொருத்தமானவர்கள் என்று அளித்த தீர்ப்புகளாகும்.

"எமது தீர்ப்பு பற்றி நாம் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரிக்கப்பட மாட்டோம் என்று யாரவது கூற முடியுமா?" ஊர் வாதமும், பிரதேச வாதமும் பேசிப்பேசி ஊமைகளையும், ஊத்தைகளையும்  உயரத்தில் கொடு வந்து வைத்தது நம் தப்பா? அல்லது அவைகளின் தப்பா?

ஒரு குதிரைப்பந்தயத்திட்கு கழுதைகளை கூட்டிச்சென்று விட்டு,  அவை வேகமாக ஓடுவதில்லையே என்று கவலைப்படுவது யார் செய்த குற்றம் சகோதரர்களே??????

நான் சிந்திப்பதட்கும், நான் உணர்வதட்கும், நான் திருந்துவதட்கும், நான் எனது குறுகிய சுயநலங்களிட்க்காக சமூக விரோதிகளோடு கை கோர்க்காமல் இருப்பதட்கும், நான் எனக்கொரு சிறந்த தலைமையை தேடிச்சென்று கண்டு கொள்வதட்கும்,

இந்த கட்டுரை உதவட்டும்.

7 comments:

  1. superb article, great food for thought.

    ReplyDelete
  2. Erdogan of Turkey n Uwaisi are shining ascending stars among our leaders , Minister Rishard trailing behind to say the least. Rest wil b vanishing into thin air soon as the current scenario unfolding their mask .

    ReplyDelete
  3. அப்துல் பாஸித், யதார்த்தமான பதிவு. ஆனால் இதையும் தாண்டி உங்களை போன்ற புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், உணர்வுள்ள இளைஞர்கள் ஓன்று சேர்ந்து இந்த பாமர மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை இனம் காட்ட வேண்டும் அல்லது சரியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

    ReplyDelete
  4. அப்துல் பாஸித், யதார்த்தமான பதிவு. ஆனால் இதையும் தாண்டி உங்களை போன்ற புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், உணர்வுள்ள இளைஞர்கள் ஓன்று சேர்ந்து இந்த பாமர மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை இனம் காட்ட வேண்டும் அல்லது சரியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

    ReplyDelete
  5. ஒழுங்கான தலைவர் இல்லாத சமுதாயம் ஒரு நாளும் உருப்படாது

    ஒழுங்கான தலைவரை தெரிவு செய்யாத சமுதாயம் ஒரு நாளும் நல்ல வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

    ReplyDelete
  6. எதிரே வரும் உள்ளூர் ஆட்சித் தேர்தல், இனிவரும் அரசியல்வாதிகளைத் தேர்வு செய்யும் களம்.

    முஸ்லிம் வேட்பாளர்கள் ஆக்க குறைந்தது அதிகாலைத் தொழுகையில் முன் வரிசையில் நின்று தொழுபவர்களா என்பதை வாக்களிக்க முன் உறுதி செய்துகொள்ளுங்கள்.

    உங்கள் கவலைக்கான மருந்து அங்குதான் உள்ளது!

    ReplyDelete
  7. May Allah Bless Brother Edorgan in his effort to bring the country back to ISLAM fully.

    For those who visited Turkey and Measured its development

    1. With Science and Technology and Economy..
    It is one of best Muslim country

    BUT if measured

    2. With Islamic rulings

    It has to do a lot in following the Sunnah and Quran into the life of its people.

    May Allah Help the Practicing Turkey Muslims to establish their power in bringing the country in to fully Islamic way.

    ReplyDelete

Powered by Blogger.