Header Ads



ஏழைப் பெண்ணின் ஜகாத்‬

நோன்பு 17 அல்லது 18 இருக்கும்..அன்று இஃப்தார் முடித்து சற்று ஓய்வில் இருக்கும் நேரம், கதவு தட்டப்படும் சத்தம். அதை தொடர்ந்து சலாம் கூறியபடி ஒரு பெண்மணி வீட்டிற்குள் வந்தார். எனக்கு சரியாக அடையாளம் தெரியாததால் யாரும்மா? என்ன விஷயம் என்று கேட்டதும்,

”வாப்பா! நான் தான்  வாப்பா” என்றதும் பொறி தட்டியது போல் ஒரு நினைவு.

ஆம் அந்த பெண் வேறு யாருமில்லை. போன வருடத்திய என் பதிவின் மூலகர்த்தாவான அதே பெண்.

உலகம் முழுவதும் அனைவரையும் அழ வைத்த அதே பெண். அந்த ஏழை மகள் தான்.

''என்னம்மா எப்படி இருக்கிறாய்?'' என விசாரித்ததும், வாப்பா! நல்லா இருக்கேன் வாப்பா.. போன வருடம் யாரோ ஒருவர் கொடுத்ததாக ஒரு தொகையை ஜகாத்தாக தந்தீர்கள். அதில் பெருநாள் துணிமணி மற்றும் பெருநாள் செலவுகள் போக மீதமிருந்த பணத்தில் வீட்டிலேயே இடியாப்பம் சுட்டு வியாபாரம் செய்து வருகிறேன். நிறைய பேர் வீட்டுக்கு வந்து வாங்கி செல்கின்றனர். இப்போது ஒரளவு நல்ல நிலையில் இருக்கிறேன் வாப்பா'' என்றவள்,

என் கையில் ஒரு தொகையை திணித்து, ''வாப்பா! இது எனது ஜகாத் பணம். தினமும் ஒரு சிறு தொகையை ஜகாத்தாக நிய்யத் செய்து சேர்த்து வைத்தேன். அந்த பணம் தான் இது. என்னை மாதிரி கஷ்டப்பட்ட எதாவது ஒரு ஏழை குடும்பத்துக்கு இதை கொடுங்க வாப்பா!.''

ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

''நீங்க தான் சொன்னீங்க. அடுத்த வருடம் நீ ஜகாத் கொடுக்கும் நிலை வரனும்ன்னீங்க... இப்போ நல்லா இருக்கேன்'' என்றாள்.

ஒரு நிமிடம் மெய் சிலிர்த்துப் போனேன்.

யா அல்லாஹ்! உன் கருணைக்கு அளவு தான் ஏது.. என் இந்த ஏழை மகளின் வாழ்விலும் வசந்தத்தை திருப்பி விட்டாயே! அல்ஹம்துலில்லாஹ்!

எனக்கு பேச நாக்கு எழவில்லை. கண்ணீர் தான் கொட்டியது. எங்கிருந்து கிளம்புகிறது பாருங்கள் தயாள குணம்இ! ந்த பெண்ணிற்குள்ள மனசு நம் அனைவருக்கும் இருந்தாலே போதும், அந்த சோமாலிய சகோதரனின் கேள்விக்கு இடமில்லாமல் போய் விடும் இன்ஷா அல்லாஹ்.

என் இதயத்தில் எங்கோ உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் அந்த ஏழை மகள்.

அவளுக்கு கொடுப்பதற்கென்று வைத்திருந்த ஜகாத் பணத்தை அவளிடம் நீட்டி இதை பெருநாள் செலவுக்கு வைத்துக்கொள் என்றேன். வாங்க மறுத்து, ''இதையும் சேர்த்து இன்னொரு ஏழை குடும்பத்துக்கு கொடுத்து விடுங்க வாப்பா'' என்றாள்.

இடையில் வந்த என் மனைவியிடம், இவள்.. இவள் தான் நான் முன்பு சொன்ன நம் இன்னொரு மகள் என்றேன். விடைப் பெற்று செல்லும் முன், வாப்பா எனக்கொரு ஆசை என்றாள்..

என்ன?வென்றேன்.

''ஒரு நாள் எங்க வீட்டில் நீங்க நோன்பு திறக்க வரனும்'' என்றாள்.

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வருகிறேன்மா! மகள் வீட்டில் நோன்பு திறக்க அழைப்பு எதற்கம்மா என்றேன்.
‎இன்று‬ நம்மில் பலருக்கும் பாடம் சொல்லி விட்டு சென்று விட்டாள் அந்த ஏழை மகள்!!

சுல்தான் + சத்திய பாதை இஸ்லாம்

1 comment:

  1. She is no longer poor. Her heart and thoughts are absolutely rich. May Allah accept her Zakkat and those who gave her Zakkat.

    ReplyDelete

Powered by Blogger.