Header Ads



தகாத வார்த்தைகளால், அதிர்ந்த பாராளுமன்றம்

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றதோடு தகாத வார்த்தைப் பிரயோகங்களோடு அமைதியற்ற நிலையும் ஏற்பட்டது.

மத்திய வங்கி தொடர்பில் விவாதிக்கப்பட்ட காரணத்தினால் கூட்டு எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி வாய்த்தர்க்கங்களில் ஈடுபட்டு கொண்டன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டு எதிர்க்கட்சியினரால் வெகுவாக விமர்சிக்கப்படார். அதே போல ஆளும் கட்சியினர் மகிந்த ஆட்சியையும் கூட்டு எதிர்க்கட்சியினரையும் விமர்சித்தனர்.

இவ்வாறான விவாதத்தில் பல உறுப்பினர்களும் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்துக் கொண்டனர்.

கடும் விவாதங்களின் நடுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே பிரதமர் மத்திய வங்கி ஊழலுடன் நேரடியாக தொடர்பு பட்டுள்ளார்.

ஆனாலும் ஊழல்களுடன் சேர்த்து பிரதமரின் உண்மை முகம் மறைக்கப்பட்டு கொண்டு வரப்படுகின்றது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அதற்கு பல விதமான எதிர்ப்புகள் கூச்சல்களாக வெளிவந்தன. இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார அளுத்கமகேவின் கருத்துக்கு கூச்சல் கலந்த எதிர்ப்பினை வெளியிட்டார்.

அவரின் கூச்சல் காரணமாக ஆத்திரமடைந்த அளுத்கமகே,

நலின் நீங்கள் பிரதியமைச்சர் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வீர்கள். அதற்காக கூச்சலிட்டு என் உரையை குழப்ப நினைப்பதில் எனக்கு எந்த விதமான கவலையும் இல்லை.

இதனை விட நல்லவிதமான பெண் போல உடையணிந்து கொண்டு உதட்டுக்கு சிவப்பு நிற நிறச்சாயத்தை பூசிக் கொள்ளுங்கள் கூடிய விரைவில் பிரதியமைச்சர் பதவி கிடைக்கும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சபையில் முட்டாள், திருடன், பேச்சை நிறுத்துங்கள் என பல விதமான கூச்சல்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதத்தினை முன்வைத்து உரையாற்றியமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

2 comments:

  1. இவ்வாறான பண்புள்ளவர்களை அதிகம் வளரத்தெடுக்க ஞானசார தேரர் அவரின் வாழ்நாட்களை வீனாக்குகின்றார் மேலும் இந்த குடிகார கூட்டத்தின் மௌடீகத்தால் இலங்கை நாட்டின் நட்பண்புள்ளவர்களின் மாணங்கள் பறக்கின்றன

    ReplyDelete
  2. KADDUKULLA MODAKKU KAMPU GUDA ATHEPOL PRALAMARATHIL ,MADAYARKAL ATHIKAM.

    ReplyDelete

Powered by Blogger.