November 02, 2016

முஸ்லிம் சட்­டத்தை மாற்றும்படி நாம் கேட்கவில்லை - திருமண வயதை 16 ஆக உயர்த்தவே சொன்னோம்


ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை பெற வேண்­டு­மானால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் மாற்ற வேண்டும் என நிபந்­தனை விதித்­துள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை கண்டு தாம் ஆச்­ச­ரியம் அடைந்­த­தாக இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர் டங் மார்க் தெரி­வித்தார்.

சர்­வ­தேச சம­வா­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்­பதே எமது நிபந்­த­னை­யாகும். தனியார் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றாமல் விடு­வதும் உங்­க­ளது உள்­ளக விட­ய­மாகும். அதில் நாம் ஒரு­போதும் தலை­யி­ட­மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்கு வருகை தந்­துள்ள ஐரோப்­பிய ஒன்­றிய எம்.பி.க்கள் குழு­வினர் கொழும்பில் நேற்று நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர்  டங் மார்க் மேலும் குறிப்­பி­டு­கையில், 

இது தொடர்பில் ஊட­கங்­களில் வெளி­யான செய்­தியை கண்டு நாங்கள் ஆச்­ச­ரியம் அடைந்தோம். 

இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை பெற்றுக் கொள்ள வேண்­டு­மானால் 27 சர்­வ­தேச சாச­னங்­களை மதிக்க வேண்டும். சர்­வ­தேச சாசனம் என்ன கூறு­கின்­றது என்றால் 16 வய­தி­னி­லேயே ஒரு பெண் திரு­மணம் முடிக்க தகு­தி­யா­கின்றார்.

இந்தச் சர்­வ­தேச சாச­னத்தை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொண்டால் தான் ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லுகை கிடைக்கும்.

நீங்கள் கூறு­கின்ற இந்தத் திரு­மணச் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றா­ததும் உங்கள் விடயம். உங்­க­ளு­டைய உள்­ளக விட­யங்­களில் நாங்கள் தலை­யிட மாட்டோம்.

ஆனால் பெண்களின் திருமண வயதானது 16 வயதாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச சாசனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்றார். விடிவெள்ளி

2 கருத்துரைகள்:

இந்தக் கருத்து உண்மையானால் அதற்கு முஸ்லிம் சமூகம் அதற்கு எதிராக நிற்பதற்கு நியாயங்கள் தென்படவில்லை. இன்றைய காலகட்டத்தில் 16 வயதுக்குக் குறைந்த வயதுள்ள பெண்பிள்ளைகளைத்திருமணம் செய்து வைப்பது பல நிலைமைகளில் அது பெண் பிள்ளைக்குச் சாதகமாகஅமையமாட்டாது என்பது எமது கருத்து.

AS per current time ? If you keep apply this theory , after few years they will also say As per current time.. Man should be allowed to marry man and woman should be allowed to marry woman and so on.. because they already consider their countries are more civlilzed in the world and do allow homosexual marriage by LAW.

Hai Mister.. GSP provider and so called civilized(?) west, WE are to follow the command of the ONE TRUE GOD who created you and us. You may follow stupid systems that changes with time. You worry marriage age BUT you do not worry about your school girls less than 16 years having boy friend and get on to illegal sex relation, rather you are promoting this culture.

WE say do not try to destroy our culture or marriage life. We are not ready to compromise our peaceful marriage life for your evil plots.

Go back to history.. what was the age of SHARA when see wedded to the messenger ABRAHAAM (pbuh). Go and read ...What was the AGE of MARRY (pbuh) when she gave birth to JESUS (pbuh).. many more.

Our ancestors made young age marriage and still they lived a peaceful life on earth.. BUT it is you people destroy the culture and now wanted to change the peaceful family life due to your own mistakes.

May GOD guide you.. if there is no guidance for you from
God... We ask the same GOD to protect us from your evils.

Post a Comment