October 02, 2016

முஸ்லிம் கிரா­ம மைதா­னத்தை கைப்­பற்­­ற இன­வா­திகள் முயற்­சி - ஐ. நா. அலு­வ­லகத்தில் முறைப்­பாடு


-விடிவெள்ளி ARA.Fareel-

மும்­மானை முஸ்லிம் கிரா­மத்தில் மைதா­னம் ஒன்றைக் கைப்­பற்­­று­வ­தற்கு இன­வா­த சக்­திகள் முயற்­சி­களை மேற்­கொள்­வது தொடர்பில் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் அலு­வ­லகத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­ற­து.

மும்­மானை விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி அப் பகுதி முஸ்­லிம்­க­ளின் வர்த்­த­கத்தை முடக்­கு­வ­தற்­கான திட்­ட­மிட்ட வேலைத்­திட்டம் ஒன்றை தாம் நடை­மு­றைப்­ப­­டுத்தி வரு­வ­தாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் கொரி­யாவில் வைத்து கூறி­யி­ருந்த நிலை­யி­லேயே இந்த விடயம் ஐ.நா.வின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­து.

இதற்­கி­டையில் மும்­மானை கிரா­மத்தின் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் விளை­யாட்டு மைதானம் தொடர்­பான பிரச்­சி­னையில் கிரி­யுல்ல பொலிஸார் முஸ்லிம் தரப்பில் 9 பேரையும் பெரும்­பான்­மை­யி­னரின் தரப்பில் 7 பேரையும் கடந்த செவ்­வாய்­க்­கி­ழ­மை குளி­யாப்­பிட்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினர்.

முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் தரப்பில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட 9 பேரில் வித்­தி­யா­ல­யத்தின் அதிபர், பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்தின் உறுப்­பி­னர்கள் ஐவரும் அடங்­கு­கின்­றனர்.

மும்­மானை முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் விளை­யாட்டு மைதா­னத்­துக்குள் கட்­டாக்­காலி மாடுகள், ஆடுகள் உட்­பி­ர­வே­சிப்­பதை தடுப்­ப­தற்­காக அதிபர், வலய கல்வித் திணைக்­க­ளத்தின் அனு­ம­தியைப் பெற்று மைதா­னத்­துக்கு வேலி­ய­மைக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட போது அவ்­வூரைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்­த­வர்கள் வேலியை கழற்றி, குழப்பம் விளை­வித்­தமை தொடர்பில் கிரி­யுல்ல பொலிஸில் முறைப்­பாடு செய்யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அவ்வூர் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஒருவர் மீது முஸ்­லிம்கள் மிளகாய்த் தூள் வீசி­யது உட்­பட மேலும் பல முறைப்­பா­டு­களை பொலிஸ் நிலை­யத்தில் முன்­வைத்­தனர். இத­னை­ய­டுத்தே கிரி­யுல்ல பொலிஸார் குறிப்­பிட்ட 16 பேரையும் செவ்­வாய்க்­கி­ழ­மை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.

வழக்­கினை கிரி­யுல்ல பொலிஸார் சட்­டப்­பி­ரிவு 51 இன் கீழேயே தாக்கல் செய்­தி­ருந்­தனர். பாட­சாலை மைதானப் பிரச்­சி­னையை சட்­டப்­பி­ரிவு 51 இன் கீழ் தாக்கல் செய்ய முடி­யா­தெ­னவும் இவ்­வாறு தாக்கல் செய்­வது மனித உரிமை மீறல் எனவும் பாட­சாலை தரப்பில் ஆஜ­ரான RRT சட்­டத்­த­ர­ணிகள் வாதிட்­டார்கள்.

குரு­நாகல் மாவட்­டத்தின் கடு­கம்­பள தேர்தல் தொகு­தியில் கிரி­யுல்ல பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள மும்­மானை கிரா­மத்தின் கனிஷ்ட முஸ்லிம் வித்­தி­யா­லயம் 1972 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இப்­பா­ட­சா­லைக்கு 1977 ஆம் ஆண்டு பிர­தேச தன­வந்தர் மார்டின் சிங்ஹோ 1 ஏக்கர் நிலத்தை அன்­ப­ளிப்­பாக வழங்­கினார்.

இந்­நிலம் அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு, நில அளவைத் திணைக்­க­ளத்­தினால் வரை­ப­டமும் பாட­சா­லைக்கு வழங்­கப்­பட்­டது. இப்­பா­ட­சா­லையில் 200 முஸ்லிம் மாண­வர்கள் கல்வி கற்­கின்­றனர்.

பாட­சா­லையின் மைதானம் தசாப்­த­கா­ல­மாக பெரும்­பான்மை இனத்தின் பெருநாள் தின விளை­யாட்டு நிகழ்ச்­சி­க­ளுக்­காக வலய கல்வி திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் வழங்­கப்­பட்டு வந்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக இப்­பா­ட­சாலை மைதா­னத்தை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் உரிமை கொண்­டாடி வரு­கின்­றனர். இம்­மை­தா­னத்தை பொது விளை­யாட்டு மைதா­ன­மாக மாற்­று­வதே பெரும்­பான்மை மக்­களின் கோரிக்­கை­யாகும்.

பாட­சாலை நிர்­வா­கமும் முஸ்­லிம்­களும் இதனை மறுத்­ததன் கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை பகிஷ்கரிக்­கும்­படி ‘பொது சொத்­துக்­களை பாது­காக்கும் மக்கள் அமைப்பு’ எனும் இயக்கம் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வெளி­யிட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கடை­களில் பெரும்­பான்மை இனத்­தவர் கொள்­வ­னவு செய்­வது தடை செய்­யப்­பட்­டது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் பொது­ப­ல­சே­னாவே இந்த திட்­டத்தை முன்­னெ­டுத்­த­தாக கூறி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மும்­மானை முஸ்லிம் பாட­சாலை மைதா­னத்தை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பய­மு­றுத்தி அறி­வித்­தல்கள் வெளி­யிட்டு கையாள முயல்­வது மனித உரிமை மீறல் என RRT அமைப்பு, மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர், முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சருக்கு முறையிட்டுள்ளது.

குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பாடசாலை தரப்பில் ஆர் ஆர் ரி அமைப்பின் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். 

5 கருத்துரைகள்:

Take all legal measure ..
Take it with top people in poliitcs and with high monks
Do not argue with BBS

May Allah bolster you to attain the justness for the school!

ராஜபக்ச காலத்தில் UN இலங்கையில் தலையிடுவதை எதிர்த்து முஸ்ஸிம்கள் போராடினார்கள் (ஆணால், போராட்டம் தோல்வி).
ஆணால், இப்போது சிறு பிரச்சனைகளுக்கும் UN க்கு மனு கொடுக்கிறார்கள்.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

காணி உறுதியை கச்சேரியில் இருந்து எடுத்து பார்த்தாலே இலகுவாக தெரிந்து விடுமே இது யார் காணி என.

இந்த சின்ன பிரச்சனையைக்கு ஏன் இவ்வளவு build up கொடுக்கிறார்கள்?

Izu panamkotta kaani illa brother...ground matter

Post a Comment