Header Ads



சிங்கள பௌத்தர்களுக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டியது அவசியமானது

நாட்டின் பிரதான இன சமூகமான சிங்கள பௌத்தர்களுக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டியது அவசியமானது என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர்  பதுளை முதியங்கன விஹாரையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தலைவர்களின் முன்னுதாரணம் முக்கியமானது என தெரிவித்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டியது அவசியமானது எனவும்,  நாடு இன்னும் கொஞ்ச காலத்தில் முடிந்து விடக்கூடிய வகையில் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். சின்னவர்கள் பெரியவர்களின் நடவடிக்கைகளையே முன்னுதாரணமாக கொள்வார்கள் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் நிர்வாகக் கட்டமைப்பிற்கு அனைவரும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும், அவர்கள் மெய்யான பௌத்தர்களாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் தலைவர்களின் உணர்வுகளே நாட்டு மக்களை பிரதிபலிக்கும் என தெரிவித்த அவர், பௌத்த பிக்குகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்ற போது நாம் அதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம், அவ்வாறு இல்லாத போது சில கருத்துக்களை கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இனத்தின் காவற் கடவுளாகவே பௌத்த பிக்குகள் கருதப்படுகின்றனர் எனவும் இதனால் நல்லதோ கெட்டதோ தாம் இதனை சொல்லியே ஆக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்கள் தொடர்ச்சியாக வாழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ள அவர், இனவாதத்தை தூண்டும் நோக்கில் இவற்றைக் கூறவில்லை எனவும் சிங்களவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அந்தந்த இனங்கள் தங்களது அடையாளங்கள் மற்றும் உரிமைகள் பற்றியே பேசுவதாகத் தெரிவித்துள்ள அவர், எனினும் இந்த விடயத்தை தாம் பேசும் போது இனவாதத்தை தூண்டுவதாக சிலர் கூறுவதாகவும்  எமது இனம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.