Header Ads



மனைவியை கொலைசெய்து எரித்த கணவனுக்கு - 17 வருடங்களின் பின் மரண தண்டனை

நுவரெலியா - கந்தபொல பிரதேசத்தில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், தனது மனைவியான அனுசா காயத்திரியை கொலை செய்த குற்றத்திற்காக இந்திகருவான் குமாரவிற்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி குமுது பிரேமச்சந்திர மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.இந்தக் கொலை சம்பவம் நடைபெறும் பொழுது இந்திகருவான் குமாரவிற்கு 19 வயது எனவும் தற்போது 36 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 1999ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.கொலை சம்பவம் இடம்பெற்று சுமார் ஐந்து மாதங்களின் பின்னரே குறித்த இடத்தில் சடலம் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.1998ஆம் ஆண்டு கந்தபொல - பீதுருதாலகால மலைப்பகுதியில் தனது மனைவி அனுசா காயத்திரியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை எரித்து விட்டு, தனது மனைவி காணாமல் போனதைப் போன்று நாடகமாடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சரியான தீர்ப்பை எட்டியுள்ளது.1998ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒரு வருடங்களின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.பீதுருதாலகால மலையைச் சேர்ந்த, இந்திகருவான் குமார என்பவருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி குமுது பிரேமச்சந்திர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.