Header Ads



இலங்கை முஸ்­லிம்கள் குறித்து ரணில், வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் முன் பெருமிதம்

-விடிவெள்ளி  ARA.Fareel-

இலங்கை முஸ்­லிம்கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாட்டின் ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை. அவர்கள் நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே முன்­னெ­டுத்­தனர் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

இந்த சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் பங்­கு­கொண்­டுள்­ளீர்கள். உங்கள் முன்­னி­லையில் நான் ஒரு உத்­த­ர­வாதம் வழங்­கு­கிறேன்.

இலங்­கையில் இன­வா­தத்­துக்கு இட­மில்லை.

இலங்கை இன­வா­தத்தை எதிர்க்­கி­றது. இனி ஒரு­போதும் இலங்­கையில் இன­வா­தத்­துக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் அவர் உறு­தி­ய­ளித்தார். நேற்றுக் காலை அலரி மாளி­கையில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

இம்­மா­நாடு முக்­கி­ய­மான கால கட்­டத்தில் நடை­பெ­று­கி­றது. இஸ்லாம் ஒரு முக்­கிய மார்க்­க­மாகும். இஸ்லாம் சக­வாழ்­வுக்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும் வழி­காட்­டி­யுள்­ளது. இயேசு பிறந்து 600 வரு­டங்­க­ளுக்குப் பின்பே முஹம்­மது நபி (ஸல்) பிறந்­துள்ளார். இறைத்­தூ­தர்கள் சமூ­கத்தை நல்­வ­ழிப்­ப­டுத்­தவே முனைந்­தார்கள். அனைத்து சம­யங்­களும் சக­வாழ்­வையே வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

இந்த நூற்­றாண்டில் அவ்­வப்­போது சில இடங்­களில் இனம் மற்றும் மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீவி­ர­வாதம் தோற்­ற­மு­று­கி­றது. இலங்­கை­யிலும் தீவி­ர­வாத பிரச்­சி­னையை நாம் எதிர்­கொண்­டுள்ளோம். சமூக வலைத்­த­ளங்கள் இப்­பி­ரச்­சி­னையை பரி­மா­றிக்­கொள்­வதால் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவில் விரிசல் ஏற்­ப­டு­கி­றது.

முஸ்­லிம்­களில் சிறிய ஒரு குழு­வி­னரே தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் மற்றும் ஆயுதப் போராட்­டங்­களில் நாட்டம் கொண்­டுள்­ளனர். தம்மைப் பாது­காத்துக் கொள்ளும் அணு­கு­மு­றை­யா­கவே அதனை அவர்கள் நியா­யப்­ப­டுத்­து­கின்­றனர்.

என்­றாலும் ஆயுதம் ஏந்­து­வது தமது பாது­காப்­புக்­கான தீர்­வாக அமை­யாது. பிணக்­குகள் ஏற்­ப­டு­கின்ற போது அதனை புரிந்­து­ணர்வு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

முதலாம் உலகப் போரின் பின்பு இங்­கி­லாந்தும் பிரான்ஸும் இரு வேறு­பட்ட கோட்­பா­டு­களைக் கொண்­டி­ருந்­தன. அந்த கோட்­பா­டுகள் முஸ்லிம் உலகின் உஸ்­மா­னிய சாம்­ராஜ்­யத்தில் பிள­வுகள் ஏற்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தன. அதனால் சர்­வ­தே­சத்­தினால் மத்­திய கிழக்கு நாடுகள் சமத்­து­வ­மாக நடத்­தப்­ப­டு­வ­தில்லை என்ற சந்­தேகம் மத்­திய கிழக்கு நாட்டு மக்­க­ளிடம் ஏற்­பட்­டன.

அத்­தோடு ஏனைய நாட்டு முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் அவ்­வா­றா­ன­தொரு சந்தேகம் இருக்­கலாம். இந்தச் சந்தேகம் ஒரு­வேளை சரி­யா­கவும் இருக்­கலாம் அல்­லது பிழை­யா­கவும் இருக்­கலாம். இந்தச் சந்­தே­கங்கள் நீக்­கப்­பட்டு சக வாழ்­வுக்­கான நிலை­மைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தலாம். அல்­லது சமூ­க­வியல் சார்ந்த விட­யங்கள் மூலம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி தீர்வு காணலாம்.

ஆகவே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடித் தீர்வு காண­மு­டி­யாது. அது நீண்ட காலத்­திட்­டங்­களை வகுத்து செயற்­ப­டு­வதன் மூலமே சாத்­தி­ய­மாகும்.

நல்­லி­ணக்கப் பொறி­மு­றையில் சக­லரும் திறந்த மன­துடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வதன் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணலாம். மேலும் சமயத் தலை­வர்கள் நல்­லி­ணக்­கத்­துக்­கான செயற்­பா­டு­களில் ஈடு­ப­ட­வேண்டும். சகல நாடு­க­ளிலும் சமயத் தளங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இலங்­கையில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர். கிறிஸ்­த­வர்கள் இந்­துக்கள், முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழ்­கின்­றனர். என்­றாலும் சகல சமூ­கங்­களும் ஒரு­மைப்­பாட்­டுக்­கான விடயங்­களில் முன்­னின்று செயற்­ப­டு­கின்­றனர்.

இலங்கை மக்கள் அனை­வரும் இன, மத வேறு­பா­டு­களை மறந்து தேசிய ஐக்­கி­யத்­துக்கும் நல்­லி­ணக்­கத்­திற்கும் வாக்­க­ளித்­துள்­ளனர். பொது அபேட்­ச­க­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

பெரும்­பான்மை கட்­சிகள் இரண்டும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­க­மொன்­றினை அமைத்­துள்­ளமை நல்­லி­ணக்­கத்­துக்கு பல­மாக உள்­ளது. இலங்­கையைப் பொறுத்த மட்டில் மதங்­க­ளுக்­கி­டையில் பெரி­ய­ள­வி­லான பிரச்­சி­னைகள் இல்லை அவ்­வப்­போது உள்­ளக ரீதி­யி­லான சில சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­றன. அவ்­வா­றான சம்­ப­வங்கள் ஒரே சமூ­கத்­திற்குள் நடை­பெ­று­கின்­றமை வழமை.

இலங்­கையில் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­களின் வெசாக் பண்­டி­கையில் கலந்து கொள்­கின்­றார்கள். இதேபோல் முஸ்­லிம்­களின் இப்தார் வைப­வங்­களில் பெரும்­பா­லான சிங்­க­ள­வர்கள் கலந்­து­கொள்­கி­றார்கள். முஸ்­லிம்­களின் இப்தார் நிகழ்­வு­களை பௌத்த, இந்து, கிறிஸ்­தவ மக்­களும் ஏற்­பாடு செய்­கின்­றனர். 

இது இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்­வு­களை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்கும் தனித்­து­வ­மான அடை­யா­ளங்கள் உள்­ளன. இந்த அடை­யா­ளங்­களைப் பேணும் அதே வேளை இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­திலும் உறு­தி­யாக இருக்க வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் நாம் தற்­போது நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஒன்­றி­ணைந்­துள்ளோம். அதைப் போல் நாட்டு மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவின் தலை­மையில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஜனா­தி­ப­தியும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளார்.

எதிர்­வரும் நவம்­பரில் இலங்­கையில் செய­ல­மர்­வொன்று நடை­பெ­ற­வுள்­ளது. அதன் பிர­தான தொனிப்­பொருள் மதங்­களின் பார்­வையில் ஜன­நா­யகம் என்­ப­தாகும் அச்­செ­ய­ல­மர்வில் தெற்­கா­சிய மற்றும் தென் கிழக்­கா­சிய நாடு­களின் மதங்­களின் பார்­வை­யி­லான ஜன­நா­யகம் நோக்­கப்­ப­ட­வுள்­ளன. அதில் ‘இஸ்­லாமும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பிலே முதல் அமர்வு நடைபெறவுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.