Header Ads



குருநாகலில் ஞானசார, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்க பள்ளி நிர்வாகம் கோரிக்கை


குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று -10- மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால்  இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது கவனத்துக்கு கொண்டு சென்ற போதிலும் இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ள நிகழ்வை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் முஸ்லிம் கிராமத்தை ஊடருத்து பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன், கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

நேற்று செவ்வாய்க்கிழமை குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் இந்த விடயம் தொடர்பாக சமரசப் பேச்சுக்கள் நடைபெற்றன. இதன் போது மார்க்க சொற்பொழிவு காரணம் காட்டி அதை தடைசெய்ய முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். அது மட்டுமல்லாது இன்று காலை முதல் கிரிஉல்ல பொலிஸ் நிலையத்திலிருந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்பம் முதல் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதானல் தொடர்ந்து அவர்களை எம்மால் நம்ப முடியாதுள்ளது. 

ஆகையினால், விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பை வழங்குமாறு கோரியிருந்த போதிலும் இன்றும் அவர்கள் கடமையில் அமர்த்தப்படவில்லை. இதனால் அவசரமாக மும்மன்ன கிராமத்துக்கு விசேட பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். என பள்ளி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது. 

10 comments:

  1. என்னப்பா நீங்க விசேட அதிரடிப்படை கேட்டுள்ளீர்கள். எல்லாம் மறந்து விட்டீர்களா? பேருவளையில் விசேட அதிரடிப்படை இன் ஆதரவுடன்தான் வீடுகள் கொளுத்தப்பட்டது. கிழக்கில் கிரிஸ் யக்காவை எமது மக்கள் பிடித்தபோதெல்லாம் விசேட அதிரடிப்படைதான் வந்து ஜீப்பில் மீட்டுக்கொண்டுபோனது மட்டுமல்லாமல் கிரிஸ் மனிதனாக வந்த அரச போலீஸ் மற்றும் இராணுவத்தை விரட்டிப்பிடித்த குற்றத்திற்காக எமது முஸ்லிம்களை பதம் பார்த்த விசேட அதிரடிப்படையையா காவலுக்கு கூப்பிடிறீங்க?

    ReplyDelete
  2. பயப்பட வேண்டாம். அல்லாஹ் எங்களோடு இருக்ககினறான். முஃமின்கள் கவலைப்படத் தேவையுமில்லை. அச்சங் கொள்ளத் தேவையுமில்லை.

    ReplyDelete
  3. உண்மை சகோதரர் மாகிர்,அதற்கு தகுதியாக நாங்க இருக்க வேண்டுமே

    ReplyDelete
  4. Our leader varukirar varukirar

    ReplyDelete
  5. Do not trust government,special forces or Muslim ministers but Almighty ALLAH.
    He will protect us until we trust him, obey him and offer salah (prayers) to him .

    ReplyDelete
  6. மதத்தை பிரச்சாரம் செய்யும் போது இன்னொரு மத மக்கள் அச்சம் அடைவதன்றால் இப்படியொரு மதப்பிரச்சாரமும் பிரச்சாரகரும் தேவையா?பயங்கரவாதிகள் எவ்வாறு மதத்தலைவர்களாகவும் ஆகமுடியும்

    ReplyDelete
  7. Replies
    1. Hahah Gnanasara Thaan ippo " தலைவர்" ?

      Delete
  8. சகோ.., நளீம் சொல்வதும் உண்மை அத்துடன் முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் ரஸூலையும் பின்பற்றாத வரை அன்னிய மக்களால் சோதிக்கப்படுவோம்., சிந்திப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கும்

    ReplyDelete
  9. Islamiya historyil Ivan appan ellam vanththu poivittan.ean payam. Nammathu silent avarhaluku.panaththai kodukattum.

    ReplyDelete

Powered by Blogger.