August 28, 2016

அல்லாஹ்வின் அல்குர்ஆன் செய்தியில், நவீன விஞ்ஞான அத்தாட்சி


-Mohamed Jawzan -

வளர்ப்பு பிள்ளைகள் ஒருபோதும், வளர்ப்பவரின் சொந்த பிள்ளை ஆக முடியாது. அதற்கு அந்த பிள்ளையின் DNA மரபணுவும் வளர்த்தவருடைய சொந்த பிள்ளை என்று சாட்சி சொல்லாது.

அது, அதை பெற்ற அதற்கு சொந்தமான தாய் தந்தையின் பிள்ளை என்றுதான் காட்டி கொண்டு இருக்கும்.

வளர்த்த பெண் பிள்ளைகளை வளர்த்தவர் திருமணம் செய்ய ஆகுமானவராக இருந்தால் வளர்த்தவர் திருமணம் செய்ய ஆகுமானவர் என்ற உறவு முறையையும் அது பதிவாக காட்டி கொண்டு இருக்கும் இதை மனிதர்களால் மாற்ற முடியாது.

முகம்மது நபி அவர்கள் இறைவனின் கட்டளைபடி மறுமணம் முடித்த வளர்ப்பு மகனின் மனைவி ஜைனப் சம்பந்தப்பட்ட விடயத்திலும் மறைவான மரபணு DNA என்ற அத்தாட்சியை அல் குர்ஆன் இல் அல்லாஹ் முகம்மது நபி அவர்களின் வளர்ப்பு பெண் சம்பந்தப்பட்ட வளர்ப்பு பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்று அனுமதிக்கப்பட்ட செய்தியிலும், இந்த அல் குர்ஆன் (நபி ஈஸா அலைஹி ஸலாம்) இயேசுவின் இறைவன் அல்லாஹ்விடம் தான் இருந்து முகம்மது நபி அவர்களுக்கு அருளப்பட்டது என்பது மேலும் தெளிவாகிறது.

இன்றைய காலத்தில் அதி உயர் நவீன நுணுக்கு காட்டிகள் மற்றும் கருவிகள் மூலம் கண்டுபிடித்த உண்மையை அல்குர்ஆன் அன்றே சொன்னது.

இதுவும் அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு மிகப்பெரிய அத்தாட்சியாக உள்ளது .

அல் குர்ஆன் 

وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ۚ وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًاِ

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37) 

Sura Al-Ahzab (1 - 50)

13 கருத்துரைகள்:

அல்லாஹு தாலா ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து நபிக்கு இறக்கிவைத்த மார்க்கத்தில் சரி பிழை பார்ப்பதற்கு விஞ்ஞானத்தின் தேவை ஒரு முஸ்லிமுக்கு இல்லை, அதற்கு அவனது ஈமான் போதுமானதாக இருக்கின்றது. இப்படியாக விஞ்ஞானத்தை கொண்டுவந்து இஸ்லாமிய அடிப்படைகளுக்கு விளக்கம் சொல்லுகின்றோம் என்கின்ற மாதிரியான நடவடிககிகள் காரணமாக நபி வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தார் என்று பேசுற விடயத்த்ற்கு தொடர்பு இல்லாத செய்தியை கொண்டுவந்து அதனை தூசி தட்டி, விஞ்ஞானத்துடன் சேர்த்து பேசுவது, நாலு மனிதர்களின் முன்னாள் நபியை கேவலப் படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது ஆகும்.

இஸ்லாமிய வாழ்க்கை, வழிமுறை, நபிவழி என்பன விஞ்ஞானத்திற்கு உள்ளவை அல்ல. இப்படியான விஞ்ஞான செய்திகளை கொண்டுவந்து நபியின் வாழ்க்கையை பிணைப்பது சைத்தானின் தூண்டுதலோ, யஹூதி நசாராநிகளுக்கு நமது மூளையை அடகு வைத்ததனாலோ ஏற்படும் பயங்கரமான நிலைமை ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதான ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்ததற்கு விஞ்ஞான விளக்கம் சொல்லு என்று காபிர் கேட்க வேண்டும் என்று நிலைமை ஏற்பட்டால், இப்படியான வில்லேஜ் விஞ்ஞான கட்டுரைகளை எழுதி அற்ப புகழ் தேட முயல்பவர்கள் என்ன பதில் சொல்வார்கள்?

இஸ்லாம் விஞ்ஞானம் அல்ல, இஸ்லாம் ஈமான் ஆகும்.
இஸ்லாம் உள்ளங்களில் ஒளியேற்றவே தவிர, லபோரட்டரியில் மைக்ரோஸ்கோப் வைத்து பிரித்து வெட்டி கொத்தி ஆராய்ச்சி பண்ணுவதற்கு அல்ல.

Well said Bro. NO need to prove Quran or Islam by Science.. it's all about your belief Raman.. pls be concious when u publish

Oru vidayaththai, vilangaamal pinpatruvathai vida, vilangi pinpatruvathey siranthathu.

Wow Anwer. Super comment

நஸ்மி சரியாகச்சொன்னீரகள். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரமான மாரக்கமல்ல.
அந்நியரை குறிப்பாக விஞ்ஞானத்தை நம்பும் நாத்திகரை இஸ்லாத்தின் பால் அழைக்க இவ்வாறான சான்றுகள் தான் பொருத்தமானது.

Anvar 👍 , Nazmi 👎. ஈமான் என்பது நம்பக்கை கொள்வது. ஆய்வு செய்து முடிவெடுப்பதல்ல. சகாபாக்கள் யாரும் விஞ்ஞான பரிசோதனைப்படி ஈமான் கொள்ளுமளவுக்கு வளர்ந்திருக்கவும் இல்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மனித அறிவுக்கொன்டு ஈமான் கொள்வது நாத்திகத்தில் தள்ளி விடலாம். நபித்தோழர்கள் நபிகளாரின் விண்ணுலக பயணத்தை எப்படி நம்பினார்கள் என்பதை நினைவு கூறல் வேண்டும்.

விஞானம் சம்பந்தமான இறை வசனங்கள் மனிதனின் ஈமானை அதிகரிக்கும். அதை மறுப்பதட்கு எங்கு ஆதாரம் ?

Appadiyenraal, Allah quranil sinthiththu unarum samuthaayathinarku Orville palace aththaachchikal industry, ena en coora vending. Science inudaiya munnody Islam thaan. Miharaaj payanam thaan inraiya Einstein's relativity theory. Yahoothikal science naathikamayapaduthi irukiraarhal.

Voice நீங்கள் நினைப்பது போன்று நாச்தீகர்கள் என்பவர்கள் முட்டாள்களோ, மடையர்களோ அல்ல. நம்பிக்கைகளைத் தாண்டி சிந்திப்பவர்கள். அவர்களுக்கு உங்களது சின்ன விஞ்ஞான விளக்கங்களை கூறி தப்பிவிட முடியாது.

அப்துல் காதற் ஜீலானியின் "யாருமில்லாத கப்பல் துறைமுகம் வருகின்றது, தானாக பொருட்களை இறக்குகின்றது" பாணிக் கதைகளை இப்பொழுதுள்ள நாச்தீகர்களுக்கு சொல்லி தப்பிவிட முடியாது.

"கடவுள் இல்லை" என்று அவர்கள் சொல்ல, "இல்லை, அப்படி இருக்கவே முடியாது, அனைத்திற்கும் படைத்தவன் ஒருவன் இருக்கவே வேண்டும்" என்று மிகவும் கஷ்டப்பட்டு தர்க்கங்கள் புரிந்து நிறுவிவிட்டு, "அந்தப் படைத்தவன் தான் இறைவன், அல்லாஹ்" என்று சொல்லும்பொழுது அவர்கள் கேட்கின்றார்கள், "எல்லாவற்றையும் படைக்க யாரோ இருக்க வேண்டும் என்றால், இறைவனை - அல்லாஹ்வை படைத்தது யார்" என்று.

"அல்லாஹ்வை யாரும் படைக்கவில்லை, அவன் தானாகவே இருக்கின்றான்" என்றால், "யாராலும் படைக்கப்படாமல் அல்லாஹ் தானாக இருக்க முடியும் என்றால், ஏன் உலகும், அண்டங்களும், பால்வேளிகளும் தானாக இருக்க முடியாது" என்று அவர்களுக்கு வைத்த அதே பொறியை திருப்பி வைத்து கேட்கின்றார்கள்.

ஆகவே, அன்வர் சலபி சொல்வது போன்று, இஸ்லாம் என்றால் ஈமான் என்று இருப்பதுதான் சரியாகும்.

நாத்திகர்கள் முட்டாள்கள் இல்லை என்பதால்மான் அவர்கள் நாத்திகர்களாக இருக்கின்றார்கள்.
இல்லாவிடில் உங்களை , எங்களைப்போன்று பெற்றோரின் மார்க்கத்தை பின்பற்றி இருப்பார்கள்.
ஆதாலால்தான் விஞ்ஞானத்தினை உபயோகிக்க வேண்டும். நீங்கள் கூறுகின்ற நாத்திகர்கள் விதன்டாவாதிகள். மேலும் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மரணிக்க முன் எது நேர்வழி என்பதை உணர்ததுவானாம், ஆனால் அவனோ அவனின் இச்சைகளின் காரணமாகவும் , தனது அந்தஸ்த்து போன்றவற்றின் காரணமாகவும் ஏற்றுக்கொள்ள மறுப்பான்.
அபூ ஜஹலுக்கும் இது தெரிந்திருந்ததை ஹதீஸ்களின் மூலம் காணலாம். ஏன் நபிகளாரின் uncle Abu Talib இன் வரலாற்றின் மூலமும் இந்த உண்மைகளை அறியலாம்.
இஸ்லாம் எதை சரி என்றாலும் அது விஞ்சான ரீதியாகப் பார்த்தாலும் சரியாகத்தான் அமையும்.

voice SriLanka; சரியாக சொன்னீர்கள், இஸ்லாத்தை படைத்தவன் அல்லாஹ், விஞ்ஞானத்தை படைத்தவனும் அல்லாஹ் அப்படியென்றால் இரண்டும் எப்படி முரண்படும். மத்தியகால ஐரோப்பாவில் வாழ்ந்த முஸ்லிம்களை பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை போலும்.யூதர்கள் விஞ்ஞானத்தை நாஸ்திகமயப்படுத்தி இருக்கிறார்கள், அதனை இஸ்லாமியமயப்படுத்த வேண்டும். who created allah by zakir naik: google it there are lot of videos you can find Mr. Ashif Haneefa. மார்க்கக்கல்வி, உலகக்கல்வி என்று முஸ்லிம்கள் பிரித்து நோக்குவதும் யூதர்களின் சதித்திட்டமாகும், அப்போதுதான் முஸ்லிம்களை அறிவுரீதியாக வீழ்த்தமுடியும் இந்த பொறிக்குள் Ashif Haneefa, Anver salafi போன்றோர் மாட்டிக்கொண்டார்கல்.அல்லாஹ் குரானில் ஏன் "சிந்தித்து உணரும் சமுதாயத்தினருக்கு இதில் பல அத்தாட்சிகள் உண்டு" என தெரிவிக்கவேண்டும். அக்காலத்து மக்கள் அறிவீனர்கள் என்றால் பிரமிட், பாபிலோன் தொங்கு தோட்டம், சீனா பெருஞ்சுவர், மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன. https://truereligiondebate.wordpress.com/2008/03/03/non-muslim-scientists-embraced-islam-after-discovering-the-miracles-of-the-noble-quran/ மேலுள்ள லிங்க் இணை கூகுளை சர்ச் செய்து பார்க்கவும். இவ்வளவு காலமும் யூனிவெர்ஸ் [ஒரு விண்வெளி தான் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்] இப்பொழுது முழட்டிவெர்சே [பல விண்வெளியில் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்], இன்னும் போக போக மறுமை வாழ்வென்ற ஒன்று உண்டு என விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிப்பார்கள். ஆகவே ஈமான் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல[வறுமையின் காரணமாக நம்பிக்கை மாறலாம்], ஈமான் என்பது 100% உண்மை [அறிவியல் ரீதியாக விளங்கினாள் வறுமையிலும் நம்பிக்கை இழக்க மாட்டான்].ஸஹாபாக்கள் நபியவர்களை கண்கூடாக கண்டவர்கள், நாம் காணாதவர்கள். ஆகவே அவர்களுடைய ஈமானியத்தின் தரம் வேறு நம்மளுடைய தரம் வேறு. நபியவர்களே தெரிவித்தார்கள் என்னுடைய காலமே பொட்கலாம் என்று. ஆகவே நமக்கிருப்பது[கண்ணெதிரேயே ] அல்லாஹ்வின் அத்தாச்சிகளே , அதனை ஆராய்ந்து நமது ஈமானை அதிகரிக்கவே முயற்சிக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு யூதர்களின் சதி வலையில் விழ வேண்டாம்.

Anvar Ali Salafi, . உங்கள் பதில் மிகவும் தவறு

இஸ்லாம் என்பது வெறும் கண் மூடி தனமான நம்பிக்கை கிடையாது அது அல்லாஹ்வின் படைப்புகளின் மறைவான விஞ்ஞான தெளிவான அத்தாட்ச்சிகளை கொண்ட 100 வீதம் விஞ்ஞான ஆதாரங்கள் உள்ள மார்கமாகும்

இஸ்லாமிய மார்க்கமானது விஞ்ஞானத்துடன் 100 வீதம் பிரிக்க முடியாத பின்னப்பட்ட ஒரு மார்க்மாகும்

இஸ்லாமிய மார்க்க வழி காட்டியான அல் குர்ஆன் இது இந்த யுகம் முடிவு வரையில் வழி காட்ட கூடியது மற்றும் அது நவீனமானது

அதன் மீது பொய்களை கொண்டு விமர்சனம் செய்யும் மூடர்களுக்கு அது சொல்லும் விஞ்ஞான அத்தாட்சிகளை கொண்ட செய்திகள் அவர்களின் மூக்கை உடைத்து இஸ்லாமிய மார்க்கம் அகிலங்களின் அதிபதியான ஆதி இறைவனாகிய அல்லாஹ்விடம் இருந்து வந்தது என்பதை ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொள்ள கூடிய அதன் விஞ்ஞானமே அதை அசைக்க முடியாத அத்தாட்ச்சியாக உள்ளது

இஸ்லாமிய நம்பிக்கை வேறு விஞ்ஞானம் வேறு என்று உளரி கொண்டு இருக்கும் மூடர்களின் கருத்தானது அது அவர்களின் வடி கட்டிய முட்டாள் தனமான அவர்களின் அறிவற்ற மூட தனத்தை நிரூபிக்கிறது

அல் குர்ஆன் சொல்லும் இஸ்லாம் தான் உலகுக்கான விஞ்ஞானம் அதை அதில் இருந்து பிரிக்க முடியாது

அல் குர்ஆன் ஜ நன்றாக படித்து பாருங்கள் புரியும் ... ☞☞☞☞

அல் குர்ஆன்
❤❤❤❤❤❤❤❤


நிச்சயமாக வானங்களும்,
பூமியும்
இணைந்திருந்தன என்பதையும்,
இவற்றை நாமே பிரித்
தோம் என்பதையும்,
உயிருள்ள ஒவ்வொன்றையும்
நாம்
தண்ணீரிலிருந்து படைத்தோம்
என்பதையும் காஃபிர்கள்
பார்க்கவில்லையா? அவர்கள்
நம்பிக்கை கொள்ள வில்லையா?
(21:30)

Sura Al-Anbiyaa (1 - 50)
____________________


மேலும் அவர்கள் இந்தக்
குர்ஆனை ஆராய்ந்து பார்க்க
வேண்டாமா? அல்லது அவர்கள்
இருதயங்கள்
அவற்றின் மீது பூட்டுப்
போடப்பட்டு விட்டனவா?
(47:24)

Sura Muhammad (1 -
38)
___

This comment has been removed by the author.

Post a Comment