Header Ads



உயர் நீதிமன்றத் தீர்ப்பினால், மண் கவ்விய அரசாங்கம்..!

பெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக அர­சி­ய­ல­மைப்­பின் அடிப்­ப­டையில் உரிய செயன்­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.

ஆகவே அச் சட்­ட­மூலம் செல்­லு­ப­டி­யா­காது என  பாரா­ளு­மன்­றத்­திற்கு  உயர் நீதி­மன்றம் தனது தீர்­மா­னத்தை  அறி­வித்­துள்­ளது. 

பெறு­மதி சேர் வரி திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பாக உயர்­நீ­தி­மன்­றத்தில்  தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­மை­மீறல் மனுக்கள் தொடர்­பாக பரி­சீ­லித்து உயர்­நீ­தி­மன்­றத்­தினால் சபா­நா­ய­க­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள தீர்ப்­பி­லேயே மேற்­படி அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

பெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் தொடர்­பான உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மா­னத்தை சபா­நா­ய­க­ருக்­கான அறி­விப்பு நேரத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு நேற்று செவ்­வாய்­க்கி­ழமை அறி­வித்த சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய,

'பெறு­மதி சேர் வரி (திருத்தச்) சட்­ட­மூலம் என்ற பெய­ரி­லான சட்­ட­மூலம் அர­சி­ய­ல­மைப்பின் 121 ஆம் உறுப்­பி­ரையின் அடிப்­ப­டையில் உயர்­நீ­தி­மன்­றத்தில் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

அர­சி­ய­ல­மைப்பின் 152 ஆவது உறுப்­பு­ரை­யிலும் 133 ஆவது நிலை­யியற் கட்­ட­ளை­யிலும் உள்­வாங்­கப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­க­ளா­னது தன்­மையில் கட்­டாயம் என்றும் அவற்றை பின்­பற்ற தவ­று­வ­தா­னது அதன் பின்­ன­ரான நடை­மு­றை­களை செல்­லு­ப­டி­யற்­ற­தாக்கும் என்று நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. 

அர­சி­ய­ல­மைப்பின் 78 (2) மற்றும் 152 ஆம் உறுப்­பு­ரை­களின் பிர­காரம் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக உரிய செயன்­மு­றைகள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தால்,  அர­சி­ய­ல­மைப்பின் 120 மற்றும் 121 ஆம் உறுப்­பு­ரை­களை 123 மற்றும் 152 ஆம் உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் மனுதாரர்களினால் கேள்விக்குட்படுத்தப்பட்ட அடிப்படையில் இந்த நிலையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படக்கூடாது என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்கிறது' என்றார். 

No comments

Powered by Blogger.