Header Ads



சிறிலங்காவின் ஏற்றுமதிகள் சரிகிறது, தூக்கி நிறுத்துகிறது சுற்றுலாத்துறை

சிறிலங்காவின் கடந்த மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தினால், குறைந்துள்ளது. 776 மில்லியன்  டொலருக்கே இந்த ஆண்டு மே மாதம் ஏற்றுமதிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில், 1590 மில்லியன் டொலர் இறக்குமதிகள் இடம்பெற்றுள்ளன. இது 0.3 வீத அதிகரிப்பாகும்.

அதேவேளை, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், வர்த்தக பற்றாக்குறை 15.7 வீதமாக விரிவடைந்துள்ளது.

அதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும், இறக்குமதிகள் 2.8 வீதத்தினால் (7,645 மில்லியன் டொலர்) குறைவடைந்துள்ளதாகவும், ஏற்றுமதிகள் 6 வீதத்தினால் (4,211 மில்லியன் டொலர்) குறைந்திருப்பதாகவும், சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, சுற்றுலாத்துறை வருவாய் 5.3 வீததத்தினால் (3,434 மில்லியன் டொலர்) அதிகரித்திருப்பதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.