Header Ads



சுவிஸில் மிகப்பெரிய பூகம்பம், ஏற்பட வாய்ப்புள்ளது - ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 2040ம் ஆண்டு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என அந்நாட்டை சேர்ந்த புவியியல் வல்லுநர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சுவிஸில் உள்ள வாலைஸ் மாகாணத்தை சேர்ந்த Raphael Mayoraz என்ற புவியியல் ஆய்வாளர் தான் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசிய அவர் ‘இத்தாலியில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தை போன்று எதிர்வரும் 2040ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிலும் ஒரு மோசமான பூகம்பம் ஏற்பட வாய்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.

சுவிஸ் புவி அமைப்பை பொறுத்தவரை கடந்த காலங்களில் 6 மற்றும் அதற்கும் மேலாக ரிக்டார் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, வாலைஸ் மாகாணத்தில் கடந்த 1946ம் ஆண்டு ரிக்டார் அளவில் 6.1 என்றளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும், மிக மோசமான நிலநடுக்கமாக 6.6 என்றளவில் பேசல் மாகாணத்தில் கடந்த 1356ம் ஆண்டு ஏற்பட்டது.

சுவிஸ் புவியமைப்பு பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 800 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை உணரப்படுவதில்லை.

எதிர்காலத்தில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டால், அதில் Valais, Basel மற்றும் Graubunden ஆகிய மாகாணங்கள் அதிகளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது என Raphael Mayoraz தெரிவித்துள்ளார்.

சுவிஸில் நிலநடுக்கத்தில் இருந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது கடந்த 1990ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.