Header Ads



ஜனாதிபதியின் பெயரை, நாய்க்கு சூட்டியவர் கைது

நைஜீரியா நாட்டு குடிமகன் ஒருவர் அவரது வளர்ப்பு நாயிற்கு அந்நாட்டு ஜனாதிபதியின் பெயரை வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்த Joe Fortemose Chinakwe என்ற 30 வயதான நபர் ஒருவர் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியான முகமது புஹாரி என்ற பெயரில் உள்ள புஹாரி என்ற வார்த்தையை அந்த நபர் தனது நாயிற்கு பெயராக வைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், நாயின் உடலில் இரண்டு பகுதிகளிலும் ‘Buhari’ என வண்ணம் பூசி பொது இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளார்.

நபரின் இச்செயலால் ஆத்திரம் அடைந்த ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் தகராறு ஏற்பட தூண்டிய குற்றத்திற்காக நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஆனால், பொலிசாரிடம் அவர் அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

‘ஜனாதிபதி முகமது புஹாரி மீது நான் அளவுக்கடந்த மரியாதை வைத்துள்ளேன். ஊழலுக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடி வருவதால் அவரை நான் சிறந்த தலைவராக ஏற்றுக்கொண்டேன்.

ஜனாதிபதி மீதான எனது அன்பை வெளிப்படத்தவே தனது வளர்ப்பு நாயின் உடலில் ஜனாதிபதியின் பெயரை எழுதியதாக’ விளக்கம் அளித்துள்ளார்.

உரிமையாளரின் வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 19 திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.