Header Ads



கைது செய்யப்படாமலிருக்கும் 2 முக்கிய பிரமுகர்கள்..!!


மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ராஜபக்ஷ குழுக்களுக்கும் மீண்டும் அதிகாரத்துக்கு வர இடமளிக்கப்பட கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

ஷிராந்தி ராஜபக்ஷ நிதி மோசடி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். எனினும் சென்றது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கே, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு செல்ல வேண்டிய அவர் சபாநாயகர் வீட்டுக்கு சென்று வாக்கு மூலம் அளித்தது எப்படி? 

மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி ஏற்படுத்திய இணக்கப்பாட்டுக்கமையவே.. 

அந்த விசாரணை முடிந்ததும் ஷிராந்தி கைதுசெய்யப்பட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஆனால் தற்போது 4 மாதங்களுக்கு மேலாகியும் அவர் கைதுசெய்யப்படாதது ஏன்? மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி அதனை தடுத்துள்ளார். இதைத்தான் டீல் என்பது. 

விமல் வீரவங்சவின் பாஸ்போட் பிரச்சினையின் போது, மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்ரமசிங்கவிடம், மைத்திரிபால சிறிசேனவுடம் பேசி தலையிட்டுமாறு கோரியுள்ளார், ரணில் இதுபற்றி பாராளுமன்றில் கூறினார். இதைத்தான் டீல் என்பது. 

அதேபோல் ராஜபக்ஷ குழுக்களுக்கும் ரணிலுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் உள்ளன. மேலோட்டமான அரசியலையன்றி நிகழும் நிகழ்வுகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அது புரியும் என அவர் கூறியுள்ளார். 

அத்துடன், ரணிலின் வியூகம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதே எனவும் இதன்படி ரணிலின் அறிவுரைக்கு அமையவே ராஜபக்ஷகளும் செயற்படுவதாகவும் அனுர குமார மேலும் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.