Header Ads



ரஞ்சனின் துணிச்சல் - துரத்தித் துரத்தி கொள்ளையனை பிடித்தார்

பிரபல திரைப்பட நட்சத்திரமும் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க நிஜ வாழ்விலும் ஹீரோவான சந்தர்ப்பமொன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய நாள் ஒன்றில் நேரம் மதியம் 12.30 மணியிருக்கும்…வெள்ளவத்தை சவோய் திரை அரங்கிற்கு அருகாமையில் பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது.

சிலர் இளைஞர் ஒருவரை மடக்கிப் பிடித்து சுழ்ந்து கொண்டிருந்தனர்.“எங்கே நீ எடுத்த பணப் பை? என சூழ்ந்திருந்தவர்கள் மடக்கிப்பிடித்த இளைஞரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த பிரச்சினைக்கு மத்தியில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சவோய் திரை அரங்கிற்கு அருகாமையில் வந்தார். ரஞ்சன் ஹீரோவாக நடிக்கும் மாயா திரைப்படத்தின் விளம்பர பிரச்சாரமொன்றுக்காகவே அவர் அங்கு வந்தார்.

திரை அரங்கிற்கு அருகாமையில் நிலவிய பதற்ற நிலைமையை பிரதி அமைச்சர் அவதானித்தார்.“அமைச்சரே அப்பாவி ஒருவரின் பேர்சை இவன் பிட்பொக்கட் அடித்துவிட்டான்.

அவர் ஒர் நோயாளி. சிரமத்திற்கு மத்தியில் வாழ்பவர்” என கூடியிருந்த மக்கள் ரஞ்சனிடம் கூறினார்கள்.

ஐயோ சார் நான் பேர்சை எடுக்கவில்லை. அந்த மனிதன்தான் எடுத்தான் நான் அவனுக்கு உதவியாகவே இங்கு வந்தேன்” என குறித்த இளைஞன் கூறியுள்ளான்.

பிடிக்கப்பட்டிருந்த இளைஞன் மற்றுமொரு நபரை பிரதி அமைச்சர் ரஞ்சனிடம் காட்டியுள்ளான். அப்போது குறித்த நபர் திரை அரங்கிலிருந்து கடற்கரை பக்கமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.

உடனடியாக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்க ஜீப்பில் ஏறி குறித்த நபரை பிடிக்க பின்தொடர்ந்து சென்றார்.

தப்பிச் செல்லும் நபர் ஜீப் வண்டி போக முடியாத குறுக்குப் பாதை ஒன்றின் ஊடாக ஓடத் தொடங்கினார், ரஞ்சன் ராமநாயக்க விடவில்லை, அவரும் ஜீப்பை விட்டு இறங்கி குறுக்குப் பாதையில் பின்தொடர்ந்து ஓடினார்.

அவருடன் அவரது பாதுகாவலர்களும் ஓடினார்கள்.திரைப்படத்தின் காட்சியொன்று போன்று இந்த சம்பவம் அமைந்திருந்தது.நீண்ட போராட்டத்தின் பின்னர், குறித்த நபரை பிரதி அமைச்சர் இறுதியில் பிடித்து விட்டார்.

பிடிபட்ட நபர் தாம் பேர்சை களவளவாடவில்லை, உங்களக்கு விசரா என கேள்வி எழுப்பி தப்பிச் செல்ல முயற்சித்தார்.

எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அமைச்சரும் அவரை விடவில்லை பின்னர் இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பேர்சிலிருந்து 6500 ரூபா பணம் எடுத்துக் கொண்டதாகவும் போதைப் பொருளுக்கு அடிமையான தாம் போதைப் பொருள் பழக்கத்தினால் இவ்வாறு பேர்சை எடுத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த மாதிரி வேலை செய்ய வேண்டாம், வேலையில்லா விட்டால் நான் வேலைத் தேடித் தருகின்றேன்,

எவ்வாறெனினும் செய்த பிழைக்கு தQண்டனை அனுபவிக்க நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

பிடிப்பட்ட நபருக்கு 2000 ரூபா பணத்தை வழங்கிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பிடிபட்ட இரண்டு நபர்களையும் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.