Header Ads



நான் எதிரிகளை, தண்டிப்பதாக கூறுவது அவதூறானது - எர்துகான்

கடந்த வாரம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, தன்னுடைய அரசியல் எதிரிகளை தண்டித்து வருவதாக தெரிவிக்கப்படும் கூற்றுகள் அவதூறானவை என்று துருக்கிய அதிபர் ரசீப் தயிப் எர்துவான் கூறியிருக்கிறார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒடுக்கப்பட்டதிலிருந்து, காவல்துறை அதிகாரிகள், ராணுவத்தினர் மற்றும் நீதிபதிகள் என ஏறக்குறைய 18 ஆயிரம் பேர் பணியிடை நீக்கம் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்தாக சந்தேகப்படும் நபர்களில் ஒருவரான அகின் ஓஸ்டுாக், இந்த எழுச்சியில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.

இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சித்ததாக சந்தேகப்படும் தலைவர்களில் ஒருவரான விமானப்படை கட்டளை தளபதி அகின் ஓஸ்டுர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட பல காயங்களோடு காணப்பட்ட தளபதி, இந்த எழுச்சியில் தனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை என்று மறுத்துள்ளார்.

மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எர்துவான் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தெவித்திருக்கிறார்.

முன்னதாக, மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான துருக்கியின் பேராவல் நிறைவேறாமல் போகும் என்று பல ஐரோப்பியத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.