July 15, 2016

"முஸ்லிம் மாண­வர்­களை காலில் வீழ்ந்து, வணங்­கு­மாறு வற்­பு­றுத்த எவ­ரு­க்கும் உரிமையில்லை"


-விடிவெள்ளி MFM.Fazeer-

வத்­தளை, ராகுல வித்­தி­யா­ல­யத்தின் ஆரம்ப பிரிவில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண­வனை வகுப்­பா­சி­ரி­ய­ருக்கு கெள­ரவம் செய்யும் முக­மாக அவ­ரது காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­தி­ய­மை­யா­னது இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் சாசனம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு எதி­ரா­னது என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

தனது பிள்­ளையை வகுப்­பா­சி­ரி­யரும் பாட­சா­லையின் தேரர் ஒரு­வரும் காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தாக வத்­தளை அக்பர் டவுன் பகு­தியைச் சேர்ந்த எம்.ஆர்.எம். சஜானி இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போதே ஆணைக் குழு மேற்­படி தீர்ப்பை அறி­வித்­துள்­ளது.

முறைப்­பாட்டில் ராகுல வித்­தி­யா­ல­யத்தின் அதிபர், ஆரம்ப பிரிவின் அதிபர் மற்றும் வகுப்­பா­சி­ரியை டப்­ளியூ.பி.என்.ஜி. விதான பத்­தி­ரண ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நிலையில், இனி மேல் குறித்த பிள்­ளையை ஆசி­ரி­யரின் காலில் விழுந்து வணங்கக் கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தில்லை, அவ­ரது மத, கலா­சார அனுஷ்­டா­னங்­களை தொடர தடை விதிப்­ப­தில்லை உள்­ளிட்ட உறு­தி­களை வகுப்­பா­சி­ரியர் ஆணைக் குழுவில் வழங்­கி­யுள்ள நிலையில் இந்த முறைப்­பாடு மீதான விசா­ர­ணைகள் சுமு­க­மாக நிறைவு பெற்­றுள்­ளன.

இந் நிலை­யி­லேயே இனிமேல் இவ்­வா­றான மத உரி­மை­களை மீறும் நட­வ­டிக்­கைகள் எந்த பாட­சா­லை­க­ளிலும் நடை பெறாத வண்ணம் அனைத்து அதி­பர்கள் மற்றும் ஆசி­ரி­யர்­களை தெளி­வு­ப­டுத்­து­மாறு இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு கல்வி அமைச்சின் செய­லா­ள­ருக்கு பரிந்­துரை செய்­துள்­ளது. மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் தலைவர் என்.டி.உடு­கம இதற்­கான பரிந்­து­ரையை கல்வி அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

எச்.ஆர்.சி./735/16 என்னும் இலக்­கத்தில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்­யப்­பட்ட முறைப்­பாட்டில், தனது பிள்­ளையை வகுப்­பா­சி­ரியர் காலில் விழுந்து வணங்க கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தா­கவும் தாம் பின் பற்றும் இஸ்லாம் மதத்தின் பிர­காரம் இறை­வனைத் தவிர வேறு எவ­ரையும் வணங்க முடி­யாது என்­பதால் ஆசி­ரி­யையின் கட்­டா­யப்­ப­டுத்­த­லா­னது தமது மத உரி­மையை மீறு­வ­தாக அமைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் ஆராய்ந்­துள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு, இஸ்லாம் மதத்தின் பிர­காரம் ஒரு­வரை கெள­ர­வப்­ப­டுத்­து­வ­தற்­காக அவரை இன்­னொ­ருவர் வணங்க முடி­யாது எனவும் வணக்கம் என்­பது இறை­வ­னுக்கு மட்­டுமே செலுத்­தப்­பட வேண்டும் என்­பது மதத்தின் அடிப்­படை அம்சம் என்­ப­தையும் உறுதிச் செய்­துள்­ளது.

அதன்­படி இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை உரி­மைகள் தொடர்­பி­லான பிரிவின் 10 ஆவது அத்­தி­யா­யத்தில் ஒவ்­வொரு மனி­தனும் தான் சார்ந்த மதத்தை பின்­பற்ற அல்­லது விசு­வாசம் கொள்ள பூரண உரிமை உடையவன் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள மனித உரி­மைகள் ஆணைக் குழு,

 தனது மதம் கலா­சாரம் உள்­ளிட்­ட­வற்றை பகி­ரங்­க­மாக பின்­பற்ற ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உரிமை, சுதந்­திரம் உள்­ள­தாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

அதன்­படி, முறைப்­பாட்­டாளர் தெரி­வித்­ததைப் போன்று அவ­ரது மத உரிமை மீறப்­பட்டால் அவ­ருக்கு அந்த உரிமை வழங்­கப்­படல் வேண்டும் என குறிப்­பிட்­டுள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு பொறுப்புக் கூறத்­தக்­க­வர்­க­ளி­டமும் சம்­பவம் குறித்து விசா­ரணை செய்­துள்­ளது.

அதன்­படி இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ள குறித்த வகுப்­பா­சி­ரியை, தான் குறித்த பிள்­ளைக்கு ஒரு போதும் தன்னை வணங்க கட்­டா­யப்­ப­டுத்­த­வில்லை எனவும், இதன் பிறகும் எந்த கட்­டா­யப்­ப­டுத்­தல்­க­ளையும் செய்யப் போவ­தில்லை எனவும் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

 இந் நிலையில் ஒரு­வரின் மத கலா­சார உரி­மை­களை மீறும் வண்ணம் பாட­சா­லையில் கெள­ரவப் படுத்தும் நட­வ­டிக்­கைகள் அமைய முடி­யாது எனவும் அவ்­வா­றான முறையில் கட்­ட­ளை­களை பிறப்­பித்து கட்­டா­யப்­ப­டுத்த இலங்­கையின் கல்வித் துறைக்கு சட்­டத்தில் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு இரு தரப்பின் சுமுகமான நிலைப்பாட்டையடுத்து விசாரணையை நிறைவு செய்துள்ளது.

இந் நிலையிலேயே இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதை தடுக்கும் விதமாக  அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

9 கருத்துரைகள்:

இன்னும் நம் சமுதாயம் திருந்தவில்லை எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகள் இருக்கும் போது ஏன் சிங்கள பாடசாலைகளில் சேர்க்க வேண்டும் நாமே நம் தலையில் மண்ணை அள்ளி வைப்பது போன்ற வேலையை செய்கிறோம் இவ்வாறு அன்னிய பாடசாலையில் படித்து தம் கலாச்சாரத்தை இழந்வர்கள்தான் பிற்காலத்தில் முஸம்மில் போன்றவர்களைப்போல் இஸ்லாத்துக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கருத்து சொல்வதும் பெரும்பான்மைக்கு ஆதரவாக இருப்பதும் இதுவே காரணம் .அடுத்து இப்பாடசாலையில் காலில் விழுவது,மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது,இம்மாணவர்கள் 10.13வருடம் அந்நிய மத கலாச்சாரம் நிறைந்த பாடசாலையில் சக மாணவர்களுடன் இரண்டறக்கலந்து படிக்கும் போது இவர்களிடம் ஈமானின் துளி கூட மீதம் இருக்குமா ஏன் இந்த பெற்றார் சிந்திக்க மாட்டார்களா?தன் பிள்ளையை தானே வழி கேட்டுக் கான பாதையில் கொண்டு செல்வது கேவலமானதும் வருந்தத்தக்கதும்

இன்னும் நம் சமுதாயம் திருந்தவில்லை எத்தனையோ முஸ்லிம் பாடசாலைகள் இருக்கும் போது ஏன் சிங்கள பாடசாலைகளில் சேர்க்க வேண்டும் நாமே நம் தலையில் மண்ணை அள்ளி வைப்பது போன்ற வேலையை செய்கிறோம் இவ்வாறு அன்னிய பாடசாலையில் படித்து தம் கலாச்சாரத்தை இழந்வர்கள்தான் பிற்காலத்தில் முஸம்மில் போன்றவர்களைப்போல் இஸ்லாத்துக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கருத்து சொல்வதும் பெரும்பான்மைக்கு ஆதரவாக இருப்பதும் இதுவே காரணம் .அடுத்து இப்பாடசாலையில் காலில் விழுவது,மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது,இம்மாணவர்கள் 10.13வருடம் அந்நிய மத கலாச்சாரம் நிறைந்த பாடசாலையில் சக மாணவர்களுடன் இரண்டறக்கலந்து படிக்கும் போது இவர்களிடம் ஈமானின் துளி கூட மீதம் இருக்குமா ஏன் இந்த பெற்றார் சிந்திக்க மாட்டார்களா?தன் பிள்ளையை தானே வழி கேட்டுக் கான பாதையில் கொண்டு செல்வது கேவலமானதும் வருந்தத்தக்கதும்

Edu pool enum adiham nadakinrad.

மேற்படி கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியாது.குறிப்பாக ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சிங்கள மொழியில் கல்வி கற்ற வேண்டும் எனதீர்மானித்தால் அதற்குத்தடையாக எவரும் இருக்க முடியாது. இஸ்லாத்தை ஏனையவர்களுக்கும் குறிப்பாக பெரும்பான்மையினருக்கு எடுத்து வைக்க முற்பட்டால் அதற்கு சிங்கள மொழியைத்திறமையாக கற்றுத்தேற வேண்டும். அத்தகைய உன்னதநோக்கம் இருந்தால் சிங்கள மொழியைக் கற்க சமூகம் அவர்ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

Mustafa jafer உங்கள் கருத்து முற்றிலும் உண்மை இவ்வுலகத்துற்கு கொடுக்கும் முக்கியத்தும் மறுமைக்கு இந்த சமூகம் ஏன் கொடுப்பதில்லை

சரியாக சொன்னீர்கள் முஸ்தபா.

யார் ஒரு கூட்டத்திட்கு ஒப்பாக நடக்கின்றாறோ அவர் அந்த கூட்டத்தை சேர்ந்தவராவார் என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்)
இன்னும் மனிதர்களில் 'நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்' என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (2:8)

It is welcome that the teacher promised not to order to prostrate for her. The teacher needs to understand that this is not the way to discipline or respect. This student will remember this forever & will retaliate one-time. The solution is not, not sending them to Singhalese schools. Muslims students must speak better Singhala than Singhalese. It is not respectable dragging an individual's name here unnecessarily.

Dr Sir ,
There is only very limited Muslim schools which is insufficient to accommodate all the children.
Our political leaders are blindfolded as usual.

Post a Comment