Header Ads



பட்டையை கிளப்பம் செல்பி

எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரத்தில் இருந்து எகிப்து தலைநகரமான கெய்ரோவுக்கு சென்ற ‘எஜிப்ட் ஏர் பிளைட்’  நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை நேற்று நடுவானில் ஒருவர் கடத்தினார். தன் உடலில் வெடிகுண்டு கட்டியிருப்பதாக கூறியதை அடுத்து கடத்தல்காரனின் விருப்பப்படி விமானம் சைப்ரசில் தரையிறக்கப்பட்டது.  

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடத்தல்காரன் சரண் அடைந்தான். 24 ஆண்டுகளாக தன்னை பிரிந்து வாழும் மனைவியை சந்திப்பதற்காக 62 பேருடன் எகிப்து விமானத்தை கடத்தியதாக போலீஸ் காவலில் இருக்கும் கடத்தல்காரன் தெரிவித்துள்ளான். 

இந்நிலையில் நேற்று கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பெஞ்சமின் என்ற 26 வயது இங்கிலாந்து இளைஞர் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். காரணம் விமானத்தை கடத்தியவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான். உடலில் கட்டியிருக்கும் வெடிகுண்டை வெடிக்கவைத்து விமானத்தை சிதறடித்துவிடுவேன் என்று மிரட்டிய கடத்தல்காரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதுவும் அவனின் அனுமதியுடன் எடுத்த அந்த படத்தை விமானத்தில் இருந்தப்படியே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த படத்தைப் பார்த்து பயந்து போன சில நண்பர்கள் பாதுகாப்பாக இரு என்று அறிவுறை கூற, சிலரோ புகைப்படம் உண்மையா பொய்யா என்று தெரியாமல் குழம்பிப்போய் விட்டனர். 

உடலில் வெடிகுண்டை கட்டியிருக்கும் கடத்தல்காரனுடன் சிரித்தப்படி எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் புயலை கிளப்பிவருகிறது. 

No comments

Powered by Blogger.