Header Ads



இலங்கைக்கு உதவ, சவுதி அரேபியா தயார்- BBS எச்சரிக்கையினால் அடிபணிந்த மைத்திரி..?

-Tw_

பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார்.

சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அண்மைக்காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு குறைவடைந்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக மிக விரைவில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியொன்றை எதிர்கொள்வதுடன், அரசாங்கத்தின அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலைக்குத் தள்ளப்பட்டு நாடு அராஜக நிலையொன்றை எதிர் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒருகட்டமாக அர்ஜுன் மகேந்திரனின் கடும் பிரயத்தனங்களின் பிரதிபலனாக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்க சஊதி அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்தத் தொகையானது இலங்கையின் பத்து வருடங்களுக்கான மொத்த தேசிய வருமானத்தை ஒத்த தொகையாகும்.

எனினும் இந்தத் தொகையை அன்பளிப்பாக வழங்கும் அதே வேளை இலங்கையில் வட்டியில்லா வங்கி முறையொன்றை அங்கீகரிக்குமாறும் சவுதி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறான வங்கி முறை ஒன்றின் ஊடாக மட்டுமே எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவ முடியும் என்றும் சஊதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்துள்ள பொது பல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, இலங்கையில் வட்டியில்லா வங்கி முறை அங்கீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மேலதிகச் செயலாளர் ஒருவர் மூலம் தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் வட்டியில்லா வங்கி முறையானது ஒரு சமூகத்தினரின் மத சட்டதிட்டங்களுக்கு அமைவானது என்பதன் காரணமாக அவ்வாறான வங்கி முறையொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான வங்கியொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் தனக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளைப் பார்க்கிலும் பொதுபல சேனா வைத்திருப்திப்படுத்துவது முக்கியமானது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்படுவதை உணரமுடிகின்றது.

அத்துடன் தேசிய கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சானது பிரதமர் ரணிலின் கீழ் செயற்படும் ஒரு அமைச்சாகும்.

குறித்த அமைச்சின் செயலாளருக்கு அவரது பதவி நிலைக்குக் கீழே உள்ள தனது மேலதிக செயலாளர் ஒருவரைக் கொண்டு கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம் அமைச்சு செயலாளரையும் ஜனாதிபதி அவமதித்துள்ளார்.

பொதுவாக அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் அல்லது அமைச்சரவை செயலாளர் தவிர்ந்த வேறு நபர்கள் விளக்கம் கோரல் கடிதங்களை அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அண்மைக்காலமாக பொதுபல சேனா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு இடையிலான நல்லுறவு வலுப்பட்டுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 comments:

  1. அட்டையை மெத்தையில் வைத்த கதைதான்

    ReplyDelete
  2. Is it true that some Western Countries encourage Islamic Finance to over come the Economic down trend. Find out and-Then make a wise decision.
    Do not think that Religion will swallow the country by helping with money.The Religion of Islam has its own way of spreading

    ReplyDelete
  3. சௌதிஅரபியா என்ன பெரிதாக செய்யப்போகிறது அரபுக்கல்லூரி பள்ளிவாசல் பேரிச்சம்பழம் இவைதான் கிடைக்கும் ஏதாவது பாலம் வீடு கட்டினால் இலங்கை மக்கள் என்றுபார்க்காது இலங்கை முஸ்லீம்கள் என்றுதான் பார்க்கும்

    ReplyDelete
  4. I think interest free banking will go ahead. Not now it will take time.

    ReplyDelete
  5. மேற்கத்தைய நாடுகள் பல இன்று வட்டியில்லா வங்கி முறைகளை நடை முறைப்படுத்துவதட்கு தற்போது ஆராய்ந்து வருகின்றார்கள் .வட்டி இல்லாத கொடுக்கல் வாங்கல் நடை முறை உண்மையில் மிகவும் இலாபகரமான நடை முறையாகும் .இஸ்லாமிய வியாபார முறையானது அனைத்து சமூகங்களுக்கும் இலாபகரமான நடை முறையாகும் .எனவே இந்த முடிவை ஜனாதிபதி அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் .அமெரிக்காவிடம் கடன் வாங்கினால் அவர்கள் இந்த நாட்டை தொடர்ந்தும் ஒரு பிச்சைக்கார நாடாகவே இருக்கும்படி ஆலோசனை சொல்வார்கள் ஆனால் முஸ்லிம் நாடுகள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் .

    ReplyDelete
  6. We are shame by selecting My3

    ReplyDelete
  7. நான் பலமுறை கூரியருக்கிறேன் My3 MR ஐ விட இனத்துவேசம் கொண்டவர். அதற்காக MR நல்லவர் என்று சொல்லவரவில்லை.
    MY3 முஸ்லிம்களின் தலையை தடவுவது போல் தனது அரசியல் இலாபத்துக்காக நடிக்கிறாரே தவிர உண்மையில் அவர் இஸ்லாமிய எதிரி. இனி வரும் காலங்களில் நீங்கள் இதுவிட பல விடயங்களை அறிந்து கொள்வீர்கள்.

    Mr Varan உங்களின் வேறு எங்காவது கக்ககும்.
    சவுதி இலங்கையர்களுக்கு வழங்கும் வெளிநாட்டு வேளைவாய்பபினால்தான் இலங்கைக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. அதை அவர்கள் சாப்பாடு மட்டுமே கூழியாக கேட்கும் வங்க தேசத்தவர்களுக்கு ( முஸ்லிம் நாடு) கொடுத்திருக்கலாமே!
    வட்டியில்லா வங்கியை அஅறிமுகப்படுத்துவதன் அவர்களுக்கு இலாபம் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை.
    இன்னொரு விடயம் ,அமானா வங்கி வட்டியில்லா வங்கியல்ல. அது வட்டியுடன் சேர்தது குட்டியையும் அறவிடுகின்றது. அண்மையில் Pawn brokering உம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
    காசு கொடுத்தால் சாராயமும் விற்கலாம் ( Tesco , Sainsburys , Walmart போன்றவற்றில் வேழைசெயபவர்களுக்கு இந்த உலமாக்கள்தான் அனுமதி வழங்கியுள்ளார்கள்) என்று பத்வா வழங்கும் உலமாக்கலும் இருக்கின்றார்கள்.
    வட்டி விடயம் வந்ததால் ஹலால் என்ற சாடையில் பல ஹராமான விடயங்கள் ( Halal Morgage , Halal Pawning , Halal share market ...) நமக்குள் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை ஞாபகமூட்டவே இதை கூரினேன்

    ReplyDelete
  8. Mr. Voice Sri Lanka i am totally agree with your comments. it seems like racism is much more important than the country's economy for the government. this is not the right pay back to people who voted for this government

    ReplyDelete
  9. Any way islam is the best

    ReplyDelete
  10. வாய்ஸ் ஸ்ரீ லங்காவின் கூற்றை அப்படியே காப்பியடித்துச்சொல்கிறேன்... அதுதான் உண்மை! எனது பழைய பின்னூட்டங்கள் பல இதை கூறியுள்ளன. ரணிலும் முஸ்லிம்கள் விடயத்தில் சளைத்தவரல்ல... 2002இல் பிரபாகரனிடம் முஸ்லிம்களை நீதிகேட்கச்சொன்னவராச்சே, ஹக்கீமுக்கு நோர்வே முள்ளைப்போட்டு வாயடைக்கவைத்தவராச்சே... இன்னும் அந்த முள்ளு தலைவரின் தொண்டையில்தான்.

    திரு. வரன் அவர்கள் தனது சமூகத்தின் ஒரு பிரதிநிதி! அவர்குரல் ஒலித்தால்தான், நமக்கு விழிப்பு ஏற்படும். இல்லாவிட்டால்... நாம் "நல்லிணக்கப்பாடு" எனும் போதையில் மயங்கி சமூகத்தையும் விற்று இஸ்லாத்தையும் விற்று சில "எம்மதமும் சம்மத" ஊடகவாதிகள்போலும், அரசியல்வாதிகள் போலும், ஏன் சமயவாதிகள்போலும், கைகூப்பி வணக்கம் சொல்லி மலர்தட்டு ஏந்தி பவனிவருவோம்.

    ReplyDelete

Powered by Blogger.