Header Ads



“நாங்கள் பொலிஸார் வந்துள்ளோம், கதவைத் திறவுங்கள்” - சுட்டு வீழ்த்தப்பட்ட முஸ்லிம்

வெல்லம்பிட்டிய பகுதியில் 9.2.2016 நள்ளிரவு மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைக்கு முச்சக்கரவண்டியில் வந்த மூவரே காரணமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சாலிக நிபுண நிராஜ் (24), மொஹமட் சுபைர் மொஹமட் ரிஷ்மி (49) மற்றும் அவரது மகளை திருமணம் செய்துள்ள தரிந்து தில்ஷான் சேனாரத்ன ஆகிய மூவரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்திருப்பதாக ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

“நாங்கள் பொலிஸார் வந்துள்ளோம், கதவைத் திறவுங்கள்” என்று கூறிக்கொண்டு வந்தவர்கள் நான் கதவைத் திறந்தவுடன் எனது கணவரின் தலையில் இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்டதாக வெல்லம்பிட்டியில் மரணமான மொஹமட் சபீர் மொஹம்மட் ரிம்ஸி என்பவரின் மனைவி பாத்திமா சப்ரி தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய 20 வீட்டுத்திட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மூவரும் சிகிச்சைப பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட மொஹம்மட் சப்ரி என்பவரின் மனைவி பாத்திமா சப்ரி மேலும் தெரிவிக்கையில்;- ணசந்தேக நபர்கள் கதவைத் தட்டிய போது, கணவர் வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்றுள்ளார் என நாம் கூறினோம். இருப்பினும் வந்தவர்கள் தாங்கள் பொலிஸார் என்று கூறியவாறு கதவை பலமாக தட்டினார்கள். கதவுக்கு காலாலும் உதைத்தனர். நாங்கள் கதவை திறந்தோம். கதவு திறக்கப்பட்டதுடன் எனது கணவரின் தலையில் இரு முறை சுட்டனர்.

நித்திரையில் இருந்த எனது மகன் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நான் பயத்தினால் கத்தினேன். இரண்டு பேரே வீட்டினுள் வந்தனர். அவர்கள் யாரென எனக்கு அடையாளம் தெரியவில்லை என்றார்.

படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவேளை மரணமான தரிந்து தில்சான் சேனாரட்ன என்பவரின் தாயார் கூறுகையில்:-

எமது வீட்டுக்கு வந்த இருவர் ‘தரி.... தரி.... தகவைத் திற” என்று கூறினர். தரிந்து வீட்டில் இல்லையென நான் கூறினேன். கதவுக்கு காலால் உதைத்து திறக்குமாறு கூறிய போது நான் கதவைத் திறந்தேன்.

உள்ளே வந்தவர்கள் எனது மகன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

துப்பாக்கியை என் பக்கமும் திருப்பினர். பயத்தினால் கத்திய போது வீட்டுக்கு வெளியே சென்ற அவர்கள் எம்மை வீட்டுக்குள் செல்லுமாறு கூறி வானத்தை நோக்கி சுட்டனர் என்றும் கூறினார். 


3 comments:

  1. தேவை இல்லாத தலையங்கம் அது என்ன "முஸ்லிம்"" jaffnaMuslim இதனால் உங்களுக்கு என்ன இலாபம்?

    ReplyDelete
  2. பாவம் bro.saleem இவர்களின் பணி புரியாமல்.....

    ReplyDelete
  3. innaalillahi vainna ilaihi rajivoon.....

    ReplyDelete

Powered by Blogger.