Header Ads



இலங்கை முஸ்லிம் உம்மா, இதை நினைத்து அழுமா..? வெட்கப்படுமா..??

-Abu Maslama-

பயமாக இருக்கிறது......!!

கடந்த ஞாயிறு (22)  ஒரு பாடசாலை அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க முஸ்லிம் பாடசாலையொன்றில் கவுன்ஸிலிங் செமினார் ஒன்றை நடாத்தினேன். “லவ், ட்ரக்ஸ் அப்யூஸ்” இரண்டையும் கவர் பண்ணி உயர்தர வகுப்பு மாணவர்களிற்கு அது நடாத்தப்பட்டது. மாணவர்களை பேர்சனலாக வோட்ச் செய்து சட் செய்த போது தான் பிரச்சனை லவ்வோ ட்ரக்ஸோ அல்ல அதையும் தாண்டி வேற மேட்டர்கள் உள்ளன என்பது தெரிந்தது.

மாணவர்களிடையே “தல” அஜீத் மற்றும் “இளைய தளபதி” விஜய் என்பவர்கள் உள்ளத்தில் இறைவனை விடவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தனர். நிறைய வேதனையாக இருந்தது எனக்கு. அவர்களிற்கு அதிக பட்சம் வாழ்க்கையில் தெரிந்திருந்த உருப்படியான விடயம் அந்த நடிகர்களும் அவர்களின் படங்களும், அவர்கள் பாவித்த பஞ் டயலாக்குகளும் தான்.

தல குரூப்பை தனியாக பிரித்தேன். அது போலவே தளபதி குரூப். தல அஜீத் குரூப்பிடம் “சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாப்பாக்களையும்” எழுதும் படி சொன்னேன். (தனியாக அல்ல, எல்லோரும் சேர்ந்து குழுாவாக யோசித்து). அது போலவே தளபதி விஜய் அணியிடம் “இஸ்லாமிய வரலாற்றில் தலை சிறந்த 05 தளபதிகளின் பெயரை எழுதும் படி சொன்னேன். (எல்லோரும் ஒன்றாக இணைந்து)

ஸஹாபாக்களில் 4 கலீபாக்களை தாண்டி எவர் பெயரும் அவர்களிற்கு தெரியவில்லை.

அதை விட கேவலம் தளபதி விஜய் குரூப். இஸ்லாமிய தளபதிகளின் பட்டியலில் “யாஸிர் அரபாத், பின் லாதின்” போன்ற பெயர்களும் இருந்தன.

நான் வாழ்க்கையில் எனது வாப்பாவின் மௌத்திற்கு பின் அழுத நாள் அது. எனது முஸ்லிம் உம்மாவின் இளைய சமுதாயத்தை நினைத்து. நான் அழுததும் அவர்கள் அப்சட்டாகி விட்டார்கள். கவுன்ஸிலிங்கை நிறுத்தி விட்டு மரணம் பற்றியும் மறுமை பற்றியும் நரகம் பற்றியும் பயான் செய்ய வேண்டியேற்பட்டு விட்டது. புரோகிறேம் முடிந்ததும் பீஃட் பேக் எடுப்பது வழக்கம்.

அதில் நிறைய மாணவர்கள் அழுதிருந்தார்கள். தங்கள் தவறுகளின் நிலையை உணர்ந்து. ஆனால் எனக்கு தெரியும் எனது பயான் என்பது பெட்டரி ஒன்றை சார்ச் செய்வது போலத்தான். சில நாட்களிளோ அல்லது சில மணி நேரங்களிலோ அது ட்ரொப் டவுன் ஆகிவிடும். இவர்களை வழி கெடுப்பது மீடியா. ஸ்மார்ட் போன்ஸ் என்றால் இவர்களை வழி நடாத்த வேண்டியது எது, யார்....?

3 comments:

  1. அல்லாஹ் பாதுக்காக்க வேண்டும்.. மீடியா என்றும் சமூக வலைத்தளம் என்றும் பல்வேறுபட்ட முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் செயற்படுத்தப்படும் நவீன சீர்கேடுகளுக்கு சிக்கித் தவிக்கும் எம சமூகத்தை காப்பாற்ற அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. athatkaakavae naam irakasiya pani aarambiththulloam. insha allah athu viraivil anaivarukkum palanalikkum.

    ReplyDelete
  3. Please contact me regarding counseling. Regarding Love and Drug everyday warnings are giving by Medias too. I have a very good approach like how to get 100 marks in all subjects. which is include all kind of career guidance. may recent seminar was held at AN NOOR Arabic college Siyambalagaskotuwa. before that it was held at Sawarana Muslim Mahaviyalaya Chilaw, Bright International School - Divurumpola, Nooraniya Muslim Vidyalaya, - Nugagahagedara, MEDS academy Paragahakotuwa, National School Paragahadeniya and Madeena National School Students at Haskampola. My contact No 0775025970. Thankyou Jazzakumullahu Hairan.

    ReplyDelete

Powered by Blogger.