Header Ads



பிரதமர் ரணிலின், முதலாவது வெளிநாட்டு பயணம்

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். 

இலங்கை பிரதமரின் புதுடெல்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில் இந்திய, இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, இந்தியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர், ”ரணில் விக்கிரமசிங்கவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்தப் பயணம் இடம்பெறக் கூடும்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம், இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்றதையடுத்து, பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, இந்த எடடு மாத காலப் பகுதியில் எந்தவொரு நாட்டுக்கும் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை. 

கடந்த மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதையடுத்தே, அவர் தனது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கிறார். 

இலங்கை ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேனவும். தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.