Header Ads



ஷார்ஜாவில் ‘தண்ணீர் நகரம்’


ஷார்ஜா என்றால் கிரிக்கெட் ஞாபத்துக்கும் வருவது இயல்பு. நவீன கட்டுமான பணிகளுக்கு புகழ்பெற்ற யுஏஇ நாட்டின் நகரங்களில் ஒன்றான ஷார்ஜா, துபாய் நகரத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. ஷார்ஜாவில் தற்போது மிகப்பெரிய தண்ணீர் சார்ந்த நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 36 கி.மீ தூரத்துக்கு பரந்து விரிந்த யுஏஇ வடகிழக்கு கடல் பகுதியில்  சுமார் திர்ஹம் 18.5 பில்லியனிலிருந்து திர்ஹம் 20 பில்லியன் வரையிலான திட்ட மதிப்பீட்டில் ‘வாட்டர் பிரண்ட் சிட்டி’ என்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 10 தீவுகள், 1100 வில்லா குடியிருப்புகள், மிகப்பெரிய ஷாப்பிங் மால், 2 பொழுது போக்கு மையங்கள், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, பொழுதுபோக்கு தீம் பூங்காக்கள், பல வகையான ஹோட்டல்கள், 200க்கு மேற்பட்ட கோபுர கட்டிடங்கள் என மிக பிரமாண்டமான கட்டிடங்கள் அமைய உள்ளது.

மொத்தம் 3 கட்டமாக நிறைவு செய்ய திட்டமிடப்படுள்ள கட்டுமான பணியில், ஒரு பகுதியாக 3.05 மில்லியன் சதுர அடி  அளவில் திர்ஹம் 9.3 பில்லியன் செலவில் 2018ல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முழுக்க தண்ணீர் நகரமாக செயல்பட உள்ள இங்கு தீவுகளுக்கு இடையே இணைப்பு பாலங்கள், தண்ணீர் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஷார்ஜா ஓயாசீஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. 2021ல் இத்திட்டம் முழுமையாக நிறைவேறும் போது இதில் 2 லட்சம் மக்கள் குடியேறலாம் எனவும், இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. சுற்றுலா பயணிகள் வருவார்கள்தான்.அங்குதானே எல்லா வசதிகளும் இருக்கு என்று அந்நிய மதத்தவர்கள் சொல்லி நம் வாயைபொத்துகிரார்கள்.மீண்டும் ஒருமுறை பொருளாதாரம் குப்புற விலும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.