Header Ads



முஜீபுர் ரஹ்மான், மரிக்கார் வெற்றி - ரணில் 499,866 விருப்பு வாக்குகளுடன் சாதனை

-அஸ்ரப் ஏ சமத்-
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,00,566 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் வகிக்கும் அதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள சுஜீவ சேனசிங்க 117, 049 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன் முஜீபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் ஆகிய இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களும், மனோ கணேசனும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.
கொழும்பு விருப்பு வாக்கு பட்டியல்
ஐக்கிய தேசியக் கட்சி
1. ரணில் விக்ரமசிங்க 500566
2. சுஜீவ சேனசிங்க 117049
3. ஹர்ஸ டி சில்வா 114148
4. ரவி கருணாநாயக்க 111394
5. சம்பிக்க ரணவக்க 100444
6. எஸ்.எம். மரிக்கார் 92526
7. முஜூபுர் ரஹ்மான் 83884
8. இரான் விக்ரமரட்ன 82738
9. விஜயதாச ராஜபக்ச 81758
10. ஹிருனிகா பிரேமசந்திர 70584
11. மனோ கணேசன் 69064

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
1. விமல் வீரவன்ச 313801
2. உதய கம்மன்பில 198818
3. சுசில் பிரேமஜயந்த 174075
4. தினேஸ் குணவர்தன 124451
5. பந்துல குணவர்தன 96057
6. மொஹான்லால் கிரேரு 65703
7. காமினி லொக்குகே 58527

மக்கள் விடுதலை முன்னணி
1. அனுரகுமார திஸாநாயக்க 65966

4 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்.அமோக வற்றி ஈட்டிய பிரதமை ரணில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் முஜிபுர்ரகுமானையும் மரிக்காரையும் வெற்றி பெறச்செய்த அந்த . அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.முஸ்லிகளின் இரண்டு கண்கள் அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  2. மட்டக்களப்பு மாவட்ட தெரிவு செய்யப்படாதவர்களின் விருப்பு வாக்கு விபரங்களை அறியத் தரமுடியுமா?

    ReplyDelete
  3. Let us wait and see what Mr. Ranil going to do for Muslim community?

    ReplyDelete

Powered by Blogger.