Header Ads



மனக்குழப்பத்தில் மைத்திரி, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டதன் பின்னணி இதோ..!

-ஊடகவியலாளர் நஜீப் பின் கபூர்-

இன்று நாட்டில் பிரதான பேசு பொருளாக இருக்கின்ற மஹிந்தவின் வேட்புமனுத் தொடர்பான பல செய்திகளை நாம் வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். இது தொடர்பான முடிவை இந்தக் குறிப்பில் சொல்லி மஹிந்த வேட்பு மனுத் தொடர்பான கதைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று கருதுகின்றௌம்.

இந்த வேட்பு மனுத் தொடர்பான செய்தியால் நாடே குழம்பிப்போயிருக்கின்ற நிலையில் அது தெடர்பான புதுக் கதை இது. மஹிந்தவிக்கு வேட்பு மனுக் கொடுப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்து வந்திருக்கின்றார் என்று தெரிகின்றது.

கொடுக்கப்பட்ட இருபக்க அழுத்தம் காரணமாக மூன்று முறை வேட்பு மனுத் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் அப்படிச் செய்ய முடியாது என்ற அவர் கைவிரித்திருக்கின்றார். இதனால் ஆத்திரம் கொண்ட மஹிந்த விசுவாசிகள் காலையில் ஒரு கதை மாலையில் மற்றொரு கதையை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இந்த மனிதனை நம்பி கடைசியில் ஏமாறுவதை விட நாங்கள் ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் கொண்டு எங்கள் பட்டியலைத் தயார் செய்து மக்கள் முன் செல்வோம் என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்து காரியம் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்தும், சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மஹிந்த பிர்யதர்சன யாப்பாவூம் அவசரப்பட்டு முடிவூகளை எடுக்க வேண்டாம் என்று அவர்களிடத்தில் மண்றாடி கால அவகாசம் பெற்றிருக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் அவர்களுக்கு மைத்திரி மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பது என்ற நிலைப்பாட்டிற்கு மஹிந்த தரப்பு வந்தனர்.

சுசில் பிரேம்ஜயந்த வீட்டில் வியாழன் அதிகாலை இரண்டு மணிவரை பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரி வியாழன் கட்சித் தலைவர்களை வெள்ளி காலை தனது செயலகத்திற்கு அழைத்து அபிப்பிராயம் கேட்க முன்னணியில் இருந்து அணைத்துத் தலைவர்களும் போல் மஹிந்த போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவது என்ற விடயத்திற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

அதன் பின்னர் தனது அணியில் இருக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களை அழைத்துக் மைத்தரி கருத்துக் கேட்ட போது ராஜித சேனரத்ன,  எம்.கே.டி.ஏ.எஸ் குனவர்தன, அர்ஜூன ரனதுங்ஹ, திலங்க சுமதிபால போன்றௌர் மஹிந்தவூக்கு வேட்பு மனுக் கொடுப்பதை கடுமையாக அங்கு எதிர்த்திருக்கின்றார்கள்.

இவர்களைத் தவிர அனைவரும் மஹிந்த வரவை ஆதரித்து பேசி இருக்கின்றார்கள் மைத்திரி ஆதரவாலர்களாக கடைசி நேரம் இணைந்து அமைச்சர்களான பலர் மஹிந்தவூக்கு ஆதரவான நிலைப்பாட்டில் அங்கு பேச மைத்திரி நிலை குழைந்து போக மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சிச் செயலாளர் ஆகியோரை அழைத்து பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் மஹிந்தாவூக்கு வேட்பு மனு வழங்க சம்மதித்தார்.

பிரதமர் வேட்பாளரும் கிடையாது. மாவட்டப் பட்டியலில் மஹிந்த ஒரு சாதாரண வேட்பாளராகவே இருக்க வேண்டும். என்ற நிபந்தனையை விதித்திருக்கின்றார் மைத்திரி.

எப்படியோ வேட்பு மனுக்கிடைத்து விட்டது அதனை எடுத்துக் கொள்வோம் அடுத்து நடப்பவற்றை பின்னர் பார்த்துக் கொள்ள முடியூம் என்ற நம்பிக்கையில் மஹிந்த இந்த கட்டுப்பாடுகளுக்கு இணங்க, மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணிச் செயலாளர் தனது கையொப்பத்துடன் இந்தத் தகவலை நாட்டுக்குச் சொல்ல இப்போது இந்தக் குழப்பம்! எனவே மைத்திரி தனக்கு எதுவூமே தெரியாது என்று கூறுவது அவரது நிலை குழைவை-தடுமாற்றத்தை  இன்னும் பறை சாற்றுகின்றது.

எனவே மஹிந்தவூக்கு வேட்புமனு கிடைத்திருக்கும் கதை முற்றிலும் உண்மையானது.

இப்போதைக்கு சுதந்திரக் கட்சியில் இரு அணிகள் என்ற கதை கிடையாது?
இதற்கு மேலும் ஒரு ஆதாரம்.

இந்த குறிப்பை முன்வைக்கின்ற எனக்கு கண்டியிலுள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் இருவர் தமது  பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு அழைத்திருந்தனர்.

அதில் ஒருவர் வீட்டில் இன்று (04.07.;2015) மாலை கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட அரசியல்வாதிக்கும் எஸ்.பி. திசாநாயக்காவூக்குமிடையே நடந்த உரையாடலின் மஹிந்தவூக்கு வேட்பு மனுக் கொடுக்கப்பட்ட கதை மேலும் உறுதியாகத் தெரியவந்தது.

தான் ஊழல் மோசடிக் காரர்களுக்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன் என்று காட்டுவதற்காக துமிந்த சில்வா, மேர்வின் சில்வா,  லக்ஷ்மன் வசந்த பெரேரா சஜின் வாஸ் குணவர்னஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரோஹித்த அபேகுணவர்தன சரன குணவர்தன மஹிந்தாநனதகே அலுத் கமகே ஆகியோருக்கு வேட்பு மனுக் கொடுக்கமாட்டேன்என்று மைத்திரி கூறி இருப்பதாக தெரிய வருகின்றது.

1 comment:

  1. No naïve and false excuses should not be accepted here . Put everything else aside and take only one thing very serious . Just six months back, Mahinda , a two time
    president , was removed from office by public votes which was called by Mahinda
    himself two years in advance with so much confidence that he will win a third term.
    People said in very clear voice "NO". But Mahinda , an unhappy loser could not
    accept DEFEAT . That's his own problem. But the general rule is that he retires from politics . That should be the position of My3 too regarding Mahinda , But it is shameful to hear that My3 surrendered to undue , corrupt and especially racist's
    pressure ! My3 betrayed the hard won new hopes of the people. He put the washings again in the mud and created uncertainty about Srilanka's future in the
    outside world and among other communities . He's a cameleon !

    ReplyDelete

Powered by Blogger.