Header Ads



ஹம்பாந்தோட்டையில் மைத்திரியை துப்பாக்கியுடன், நெருங்கிய நாமல் ராஜபக்வின் பாதுகாவலர் - விசாரணை ஆரம்பம்

1999ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து நேற்று மிகமுக்கியஸ்தர் பாதுகாப்பில் பாரிய பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குனகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சென்றிருந்த வேளையில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் சாதாரண உடையில் துப்பாக்கியுடன் நடமாடியதை கண்டுபிடித்தனர்.

குறித்த பாதுகாப்பு வீரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் பாதுகாவலர் என்று கண்டறியப்பட்டது.

உடல்சோதனையின்றி குறித்த படைவீரர், ஜனாதிபதி இருந்து வளாகத்துக்கு சென்றமை எவ்வாறு என்று பொலிஸார் வியப்பை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதிக்கு நேராக சூரிய ஒளிப்பாய்ச்சல் இருந்தமையால் அவர், உரையாற்றுவதற்கு பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஜனாதிபதி தன்னைப்போல் எல்லோரும் இருப்பார் என எண்ணக்கூடாது.உசாராக இருக்க வேண்டும் ஊழல் செய்பவன் கூட தலை நிமிர்த்தி உலவும் போது நாம் தலை குணியக்கூடாது.

    ReplyDelete
  2. எல்லாவற்றையுமே வெறும் அரசியல் சேறு பூசும் கண்ணோட்டத்துடன் பார்த்தால், மக்கள் வெறுப்படைந்து போவார்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் நாமலின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் துப்பாக்கி இருப்பது சாதாரண விடயம். அவர் தவறான நோக்கத்துடன் ஜனாதிபதியை அணுகு இருந்தால் மட்டுமே, குறித்த விடயம் பெரிது படுத்தப்படல் வேண்டும், அவ்வாறில்லாத நிலையில் இது குறித்து ஊதிப் பெருப்பிப்பதில் அர்த்தமில்லை. அலறி மாளிகளியில் தேர்தல் முடிவு வெளியான நேரம் நடைபெற்ற சாதிப் புரட்சி ஆலோசனை குறித்தே நடவடிக்கை இல்லை என்னும் பொழுது, இதைப் பற்றிப் பேசி என்ன பயன்?

    ReplyDelete

Powered by Blogger.