Header Ads



கோத்தா, பசில், டளஸ் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாது - வந்தது புதுச் சட்டம்

இரட்டை குடியுரிமையை பெற்ற இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்கு கோருவதற்கு முடியாது என்ற சரத்து நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை வரையறுக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஒருவரின் பதவிகாலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்திருந்த ராஜதந்திர சிறப்புரிமைகளும் 19 வது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில், 18 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்ட 17 வது திருத்தமான சுயாதீன ஆணைக்குழு 19 வது திருத்தத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 கோத்தா, பசில், டளஸ் அழகப்பெரும ஆகியோர் அமெரிக்க குடியுரிமையை கொண்டிருப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Dual citizenship , if properly put into use in the country of original birth , could be a
    blessing and even if abused , there's no escape from justice . Basil is the tacit
    example. We are in the global village , you will be tracked down from wherever
    you are . So, why worry ?

    ReplyDelete
  2. They don't worry about the crime. They worry incase if they sit the election they will win.

    ReplyDelete
  3. This decision on dual citizens, seems to be a good one.

    ReplyDelete

Powered by Blogger.