Header Ads



இலங்கை பெண், டுபாயில் தற்கொலை..!

டுபாய் ராச்சியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக சேவையாற்றிய இலங்கை பெண்ணொருவர் துன்புறுத்தல் மற்றும் தொழில் தருனரின் வன்முறைகள் காரணமாக கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

இலங்கையிலிருந்து பல பணிப்பெண்களும், பணியாளர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக வருமானம் ஈட்டுவதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர்.

எனினும், கடந்த காலங்களில் அவ்வாறான பணியாளர்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில், பொரேல்லையைச் சேர்ந்த 24 வயதான பெண்ணொருவர் கடந்த வருடம் வீட்டுப் பணிப்பெண்ணாக டுபாய்க்கு சென்றிருந்தனர்.

பின்னர் தாம் பணியாற்றிய வீட்டு உரிமையாளராலும், பெண்களாலும் தாக்கப்படுவதாகவும், வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமது புதல்வி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மரணித்த பெண்ணின் சடலம் நேற்று இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எமது h fm செய்திச்சேவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரண்தெனியவிடம் வினவியது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக தமக்கு தகவல் கிடைக்கப் பெறவில்லை எனவும், எனினும், சம்பவம் பற்றி தீவிரமாக ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. முதலில் பெண்களை பணிப்பெண்ணாக அனுப்புவதை நிறுத்தவேண்டும்

    ReplyDelete
  2. வஹ்ஹபிசத்திட்கு அடிபணிந்து விட்டதா? எனது கருத்து marukkap பட்டு உள்ளதே?

    ReplyDelete

Powered by Blogger.