Header Ads



பிரதியமைச்சர் பதவியை துறக்கப்போகிறேன் - திஸ்ஸ கரலியத்த

புத்த சாசன மற்றும் ஜனநாயக ஆட்சி பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட திஸ்ஸ கரலியத்த, அந்த பிரதியமைச்சர் பதவியை துறக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அவசரமாக வழங்கப்பட்ட இந்த பிரதியமைச்சர் பதவியை தான் துறக்கப்போவதாகவும் தன்னுடைய ஆதரவாளர்கள் எதிர்ப்பதனாலும் அவர்களுக்கு விருப்பம் இன்மையினாலும்  இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நாங்கள் யாருமே எதிர்ப்பார்க்காத விடயங்கள் எங்களுடைய மத்தியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. எதிர்பார்க்காத அமைச்சு பதவிகளுக்கு நாம் நியமிக்கப்பட்டோம். அன்று நான் சாரமும் சேர்ட்டும் அணிந்திருந்தேன். அமைச்சு பதவியை ஏற்பதற்கு சென்றிருந்தால் தேசிய உடையிலேயே சென்றிருப்பேன். 

மத்தியக்குழுவில் இருந்த 20 பேரில் 17 பேர், இந்த அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். எனினும், அமைச்சு பதவியை நான் பொறுப்பேற்றமை குறித்து மதவாச்சி தொகுதியிலுள்ள 70 கிராமங்களுக்கு சென்று கேட்டேன். அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்றால் வாக்குகளை பெறுவதற்கு கிராமங்களுக்கு வரவேண்டாம் என்றும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக்கட்சிக்கு நான் சென்றுவிட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். நான், மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கின்றேன். புத்தசாசன அமைச்சுக்கு கரு ஜயசூரிய பொருத்தமானவர். எனினும், அவர் கடும் முட்கள் நிறைந்த பாதையிலேயே பயணிக்கின்றார் என்றும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.