Header Ads



உள்ளுராட்சி சபைகளின், நிர்வாக காலம் நீடிப்பு

எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த 234 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலம் நிறைவடைந்த பின்னர் அவை உள்ளுராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
இதன்படி, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொகுதி முறையை அடிப்படையாக கொண்டு கலப்பு தேர்தல் முறையில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அண்மையில், உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்குமாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரிடம் கோரியிருந்தது.

இதேவேளை, தேர்தல் முறையை மாற்றுதல் மற்றும் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கையை தீர்மானிப்பது உள்ளிட்ட விடயங்கள் தமது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவை நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.