Header Ads



ஜனாதிபதி மைத்திரியுடன் பேச, பெண் மருத்துவர் தொடர்புகொண்ட போது...?

-Tw-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தெராலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன் இந்த நேரத்தில் பேச முடியாது எனவும் அவர் சமையலறையில் மதிய உணவை தயார் செய்து கொண்டிருப்பார் எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த பதிலை கேட்டு பிரபல அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் மருத்துவர் கடும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் வீட்டில் வேலை செய்ய எவரும் இல்லையா என ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.

எமது வீட்டு வேலைகளை நாங்களே செய்து கொள்வோம். எனக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு மனைவிதான் சமைப்பார் எனவும் சமையலுக்கு தேவையானவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

12 comments:

  1. உலக இன்பங்களில் பற்றின்மையையும் எளிமையையும் அதிகமாக வலியுறுத்தும் மதம் இஸ்லாம்தான்.

    ஆனால் அதனைப் பின்பற்றும் நம்முடைய அமைச்சர் கனவான்கள் எவ்வளவு ஆடம்பரமாக நமது மதத்தின் வலியுறுத்தலைக் 'கடைப்பிடிக்கின்றார்கள்' என்பதை அவர்களுக்கு ஒரு போன் போட்டுப் பேசினாலே புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. muslims follow this kind of behave from khlifa umar raliyallahu sahabi
    my3 following the way of umar raliyallahu sahabi

    ReplyDelete
  3. We are proud of you!

    ReplyDelete
  4. Excellent. I hope our Muslim mpp and ministers from you sir

    ReplyDelete
  5. எமது முஸ்லிம் பெயர்களைக் கொண்ட அமைச்சர்கள் மிகவும் எளிமையாகத்தானே வாழ்கிறார்கள்.............

    ReplyDelete
  6. " PROUD TO BE A SRI-LANKAN "

    ReplyDelete
  7. We r proud of our exemplary President. Sir we r very proud of u in casting our valuable vote.

    ReplyDelete
  8. Grate sir...... You are the best president of srilanka's history

    ReplyDelete

Powered by Blogger.