Header Ads



மீடியாக்களில் நடமாடும், தம்பதிகளின் பாலியல் வீடியோ விவகாரம்

அமானுல்லா கமால்தீன் (அமானத்ஸ்)

(இதற்குப் பின்னரும்) விசுவாசங்கொண்டோருக்கிடையில் (இவ்வாறான) மானக்கேடான விஷயம் பரவ வேண்டுமென விரும்புகிறார்களே நிச்சயமாக அத்தகையோர் - அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்வே நன்கறிவான், நீங்களோ அறியமாட்டீர்கள். (அல் குர்ஆன்-24:19)

அன்மையில் இலங்கையை சேர்ந்த முஸ்லிம் வாலிபன் ஒருவன் திட்டமிட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து தன் மனைவியுடன் நடந்த பாலியல் விடயங்களை வீடியோ எடுத்து  பெண்னை தலாக் பன்னி ஏமாற்றி விட்டு பணத்துக்கு வீடியோவை விற்று இணையத்தளங்கில் போட்ட ஒரு பெண்ணுக்கு நடந்த ஒரு பரிதாபகரமான ஒரு வீடியோ விவகாரம் வலைத் தளங்களிலும் பேஸ் புக்கிலும் வட்ஸ் அப்பிலும் மற்றும் சோஷியல் மீடியாக்களிலும் அப்பெண்ணை சீரழித்துக் கொண்டிருப்பது எமது சமூகம் மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

நடந்தது நடந்து முடிந்து விட்டது. எமது சமுதாயம் அதை மறைப்பதற்கு பதிலாக மீடியாக்களில் அந்த பெண்ணின் படத்தையும் குரலையும் பகிர்ந்து பகிரங்கப்படுத்துவதன் மூலம் எந்தப் பிரயோசனத்ததையும் நாம் அடையப் போவதில்லை. பதிலாக நோய் பிடித்த இதயமுடைய மனிதர்கள் அந்த வீடியோவை தேடிபார்க்க முயற்சிப்பார்கள். மீடியாக்களில் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோக்கள் முஸ்லிம்களுடைய எதிரிகளின் கையில் சிக்கினால் அவர்கள் அதை தவறான பிரச்சாரத்துக்கு பாவிக்க முற்படுவார்கள். மற்றவர்களுன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த பெண்ணின் மானத்தை தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தி மேலும் அவமானப்படுத்துவதற்கு காரணமாக அமையும். எனவே அந்ந வீடியோ சம்பந்தப்பட்ட சகல செய்திகளையும் பகிர்வதை சகலரும் உடனடியாக நிறுத்த வேண்டும். எனவே இது சம்பந்தப்பட்ட உங்களிடமுள்ள அனைத்து தகவல்களையும்  அழித்து விடுங்கள். யாரிடமும் இவற்றை பகிர்ந்து கொள்ளவோ கதைக்கவோ வேண்டாம். உங்கள் உறவினர் ஒருவருக்க நடந்த விடயமாகக் கருதி மறைத்துக் கொள்ளவும்.

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்  உரையில்,

'மக்கா நகரை புனிதமாகக் கருதுவது போல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் கருதுங்கள் என்று பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும், அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை அடைந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் இறைவனை அதி விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள் என்றும், அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரனை செய்வான் என்றும் கூறினார்கள்.

உலகில் எந்த ஒரு அடியான் மற்றொரு அடியானின் குறைகளை மறைக்கின்றானோ கியாமத் நாளில் அவன் குறைகளை அல்லாஹுதஆலா மறைப்பான். (முஸ்லிம்)

முடியுமான மட்டும் மற்றவர்களுடைய  குறையை மறைக்க வேண்டும். அப்படி நாம் மற்றவர்களின் குறைகளை மறைத்தால், அல்லாஹ் மறுமை நாளில் கோடான கோடிப் பேர் முன்னிலையில் எமது குறைகளை மறைப்பான். 

இந்த விவரங்களை முதன் முதலில் மீடியாவில் பகிர்ந்தவருக்கு அத்தனை பேருடைய பாவங்களும் போய்ச் சேரும். கியாமத் நாள் வரை இதன் மூலம் செய்யப்படும் அத்தனை பேருடைய பாவங்களும் இவருடைய பட்டோலையில் பதியப்படும். எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.  ஒரு தகவலை நாம் மீடியாக்களில் பகிர்ந்து கொள்ள முன் ஒரு முறைக்கு பல முறை சிந்திக்க வேண்டும். இந்தச் செயல் எனது பதிவேட்டில் நண்மையை கொண்டு வருமா? தீமையை கொண்டு வருமா? கியாத்தில் மீஸானில் எந்த தட்டை இந்நச் செயல் பாரமாக்கும்? என்பதை சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டும்.                                                                                                                                                                            
இவ்வாறு சர்வசாதரணமாக குமர்களின் கர்ப்பைக் கலைத்து அணுபவித்து விட்டு நடு ஆற்றில் விட்டு ஓடிப்போய் விடுகிறார்கள். இவர்கள் எங்கே ஓடி ஒளியப் போகிறார்கள்? எங்கு ஓடினாலும் இறுதியில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மறுமையில் இவற்றுக்கு பதில் அளிக்காமல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

இந் நிகழ்விலிருந்து ஏனைய குமர்கள் படிப்பினை பெற வேண்டும். குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் காட்டிய வரையறைக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தையொட்டியும் இவ்வாறான விடயங்களை வீடியோ எடுப்பதற்கோ போடோ பிடிப்பதற்கோ கணவனாக இருந்தாலும் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் கணவன் மனைவிக்கிடையே பிரிவு வந்துவிட்டால் அல்லது இந்த படங்கள் கை நழுவி விட்டால் ஆபத்தானது.

அப்பாவிக் குமர்கள் ஏமாற்றப்படாமலிருக்க பெறறோர்களும் புத்திமதி சொல்லிக் கொடுப்பதுடன்  திருமணமனத்துக்கு முன்  குடும்ப வாழ்வு பற்றி குமர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் வகுப்புகளை ஏனைய சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். நாளுக்கு நாள் இளம் குமர்கள் விதவையாக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறான வாலிபர்களுக்கு   சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஊர் மட்டத்திலும் கடுமையான நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.

அந்த பாதிக்கப்பட்ட சகோதரிக்காக அனைவரும் பரிதாப்படுகின்றனர். அந்த சகோதரியும் அதிகமாக இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புத் தேடவும், இது ஓரு சோதனை. அல்லாஹ்விடம் இது அழிந்து போகும்படி அழுது துஆ கேற்கவும். உண்மையான முறையில் அல்லாஹ்வை நெருங்கி அவனைப் பயப்பட்டு அவனிடமே கவலைகளை  ஒப்படைக்கவும், அல்லாஹ் ஒருபோதும் கைவிடமாட்டான். நாம் அனைவரும் அந்த சகோதரிக்கு ஒரு நல் வாழ்வு அமைய வேண்டும் என்றும் அந்த வாலிபனும் இன்னொரு பெண்னை சீரழிக்காமலிருக்க அவனுக்கும் ஹிதாயத் கிடைக்கும்படியும் பிரார்திப்போமாக! 

7 comments:

  1. May allah guide us and behave with ahlaq.may allah give relex and success her life

    ReplyDelete
  2. நல்லது கூறுனீர்கள். எனினும் அந்தக் கயவனைப் பிடித்து உதைக்க வேண்டும். பொல்லொன்றால் கடுமையாகத் தாக்கி அப் பெண்ணுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் ஆறுதல் வழங்க வேண்டும்.

    ReplyDelete
  3. உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், "தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும் வரை நீ அவனுக்கு நீதி வழங்கிவிடாதே, ஏனெனில் அவனது எதிரி ஒருவேளை இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்

    ReplyDelete
  4. விபசாரத்துக்கு அதரவாக குரானை இழுக்காதீர்கள் குர்ஆன் வசனங்கள் எதற்காக எப்படிப்பட்டோருக்காக எந்நேரத்தில் அருளப்படதோ அவைகள் அக்காலத்துக்கே பொருந்தும்.

    எனது மாற்று மத நண்பர் ஒருத்தர் என்னிடம் கேட்டார் குரான் போதிப்பெதல்லாம் வயலன்சைதானா?
    "குர்ஆனில் ஒருவசனம் இருக்கிறது காபிர்களை கானுமிடத்தில் கொள்ளுங்கள் என்று சொல்கிறதே அப்படிஎன்றால் குர்ஆன் வயலன்சை போதிக்கிரதுதானே" என்று.

    நான் சொன்னேன் நீங்கள் குர்ஆனில் ஒருபகுதியை மட்டும்தான் பார்த்துள்ளீர்கள் அதுதான் அப்படி கேட்கிறீகள்.அதன் முன்,பின் பகுதிகளையும் படித்து பாருங்கள். அதில் கூறபட்டுள்ள "காபீர்கள்" என்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கொலை செய்வதற்காக வந்த மக்கத்து காபீர்களைதானே தவிர உங்களை அல்ல என்று கூறினேன்.
    அந்த அறியாமை மாற்றுமத சகோதரர் எப்படி குரானை விளங்கி வைத்துள்ளாரோ அதே போன்று சிலர் விபச்சாரத்துக்கு ஆதரவாக குரானை விளங்கி கொண்டு ஊடடகங்களில் கருத்து தெரிவ்ப்பதை நினைக்கும் போது மனவேதனையாக உள்ளது.

    ReplyDelete
  5. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு?

    திருமணமான பின்னர் விபசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமக்கள் முன்னாள் கல்லால் அடித்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் சொல்வதன் அர்த்தம் அதை பார்க்கும் ஒவ்வொருத்தரும் அப்படிபட்ட தப்பை செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதற்காகத்தான் என்று நான் நினைக்கிறேன்.

    நம் நாட்டில் இஸ்லாமிய சட்டம் இருந்திருந்தால் அப்படிதான் தண்டனை கிடைத்திருக்கும் நம் நாட்டில் உள்ள இதுபோன்ற இலவட்டுகள் அதை கேள்வியுற்று இதேபோல் தப்பு செய்வதற்கு அஞ்சி நடுங்குவார்கள்.

    "நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள்" என்கிற கட்டளைக்கு கட்டுபட்டு இப்படிபட்ட கேவலமான இழிசெயல்களை வெளிச்சம் போட்டு காட்டுவதனூடாக இனிமேல் இப்படிநடக்க நினைக்கும் நபர்கள் பயப்படுவார்கள் அதனால் தீமை பெருகுவதை தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

    நான் தெரியாமல்தான் கேட்கிறேன் குறிப்பிட்ட விஷயத்தில் "பெண் ஏமாற்றபட்டாள் அவளின் வாழ்க்கையோடு அவள்கணவன் விளையாடிவிட்டான்" என்றுகூறும் நபர்கள் ஏன் குற்றபுலனாய்விடம் முறையிடாமல் இறக்கிறார்கள்?
    வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்கிற பயமா?
    அப்படி இல்லை என்றால்,நீங்கள் அப்பெண்ணை ஏமாற்றியவனுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டியதுதானே?

    சிலர் சொல்கிறார்கள் நாம் இவ்விஷயத்தை பற்றி பேசுவதனால் வேறு தரப்பினர் தப்பாக பேசுவார்களாம்!

    சாக்கடையில் குளிப்பவர்களின் சாக்கடையில் நம்மில் ஒருத்தி கால் நனைத்தர்க்காக, தப்பாக பேசுவார்கலாயின் அவர்களுக்கு தக்க முறையில் பதில் கொடுப்போம்.

    அதற்காக நம்மில் ஒருத்தி சாக்கடையில்தானே மிதித்துவிட்டால்' என்று விட்டு விட்டு பேசாமல் இருக்கமாட்டோம் அவளை திட்டுவோம் ஏனென்றால் நம்மில் இன்னும் ஒருத்தி அப்படிபட்ட சாக்கடையில் இனிமேலாவது கால் நனைக்க கூடாததென்பதர்க்காக.
    நம்மை தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் நன்மையை ஏவுவோம் தீமையை தடுப்போம்

    ReplyDelete
  6. இப்படியான விடயங்களை தண்டனைகளை வகுப்பதாலோ கடுமையாக்குவதாலோ மட்டும் தடுத்துவிட முடியாது.

    செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த ஒரு வயோதிபன் தனது பேரனுக்கு கூறிய கதை ஒன்றுள்ளது:


    "உன்னுள்ளே இரண்டு ஓநாய்கள் உள்ளன. ஒன்று நல்ல குணமுடைய ஓநாய். மற்றையது தீய குணமுடைய ஓநாய். இந்த இரண்டு ஓநாய்களும் உனக்குள்ளே அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும்"

    "அப்படியானால் எந்த ஓநாய் கடைசியில் வெற்றி பெறும்?" என்று கேட்டான் சிறுவன்.


    "அது நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவு கொடுத்து வருகின்றாயோ அந்த ஓநாய்" என்று பதிலளித்தான் வயோதிபன்.


    பொதுவாக எல்லா மனிதர்களிடம் ஆழ்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் வன்முறை உணர்வு போல பாலியல் வக்கிரமும் நம்மையறியாமலே மறைந்திருக்கின்றது.

    அவற்றை இன்றைய நமது சூழலும் அணுகுமுறைகளும் பெரும்தீனி போட்டு வளர்த்து வரும்போது இப்படியான பிறழ்வுகளைத் தவிர்க்க முடியாமல்தான் ஆகும்.

    பெண்களை உலகிலுள்ள போகப்பொருள்களில் ஒன்றாகச் சித்தரிக்கும் வர்த்தக விளம்பரங்கள் முதற்கொண்டு ஆன்மீக மதங்கள் வரையில் மறுசீரமைப்புச் செய்து, அவர்கள் பற்றிய மரியாதையான எண்ணங்களை சிறுவயதிலிருந்தே இருபாலாரிடமும் வலுப்படுத்தும் விதமாக சமூகத்தை மீளக்கட்டியமைப்பது ஒன்றே இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.