Header Ads



குதிரையின் கால் உடைந்ததனால், மயில் ஆடுகிறது - ஆனால் மரம் முறிந்து விழாது


-siyan s samsudeen-

அதாஉல்லாவின் குதிரையின் கால் உடைந்ததனால் அமைச்சர் ரிசாதின் மயில் ஆடுகிறது இவர்களால் மரத்தின் இலைகளுக்கு கூட எந்த பாதிப்பும் ஏற்படாது. மரம் வளர்க்கப்பட்டது முஸ்லிம்களின் தனித்துவத்தை எடுத்து காட்டுவதற்க்கே மாறாக அபிவிருத்தி என்ற மாயயின் மூலம் மக்களை திசை திருப்பி முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவதை அதனுள் உரசி விட்டு அவரை இன்னொருத்தருடன் ஒப்பிட்டு அதன் மூலம் குளிர் காயும் நிகழ்கால அரசியல்வாதிகளின் அரிசியல் இரகசியங்கள் சொல்லி மாழாதாவை 

இப்போது பாராளுமன்ற உறுப்பினர் என்ற நாமத்தோடும் ஒரு மாதத்துக்கு முன்னர் உள்ளுராச்சி மாகாண சபைகளின் அமைச்சர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அதாஉல்லா அவர்களால் செய்ய பட்ட அபிவிருத்தி வேலைகளை எந்த நன்றி உள்ள மனிதனாலும் மறக்க முடியாது  இன்னொரு பக்கம் அவர் முஸ்லிம் காங்கிரசுக்கும் முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கும் அதன் போராளிகளுக்கும் செய்த சதி வேலைகளை முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் எந்த போராளிகளாலும் மறக்க முடியாது இவரின் தலைவிதி என்னவோ இவரின் ஆளும் அரசியல் வரலாறு மட்டுப்படுத்தபட்டு  எதிர் காலத்தில் இவர் அரசியலில் ஈடுபடுவாரா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஏன் என்றால் இவருக்கு இருந்த மட்டுப்படுத்தபட்ட சில ஆதரவாளர்கள் கூட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சியில் இணைந்து செயற்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் அமைச்சர் ரிஷாத் அவர்களின் அம்பாரை விஜயத்தின் போது முன்பு உள்லுராச்சி மாகாண சபை அமைச்சராக இருந்த அதாஉல்லா அவர்களின் ஆதரவாளர்கள் அநேகமானோரை அவரின் அமைச்சு கை நழுவி போனாதான் பின்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீடன் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இந்த புணர்தலும் பிரிதலும் முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைமைக்கும் அதன் அம்பாரை  ஆதரவாளர்களுக்கும்  எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போறதில்லை ஏன் என்றால் போராளிகளால் வளர்க்கப்பட்டது ஆலமரம் அதன் ஆணி வேரை தலமையாகவும் விழுதுக்களை போராளிகளாகவும் கொண்டு வாழ்கின்ற மரம் அது  ஆயிரம் பேர் புதிய புதியதாய் சிறப்பான கட்சிகளை ஆரம்பித்து கிழக்கில் ஊடுருவினாலும் கொள்கை என்ற ஒன்றில் உறுதியாய் வாழ்கின்ற அம்பாரை  மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மக்களை எந்த கட்சிக்குள்ளும் உள் வாங்க முடியாது ஏன் எனில் முஸ்லிம் காங்கிரசின் உண்மை போராளிகள் மட்டுமே கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்

அமைச்சர் ரிஷாத் அவர்களின் அம்பாரை விஜயத்தினால் மரத்தின் இலைக்கு கூட எந்த பாதிப்பும் வராது முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் இதை அலட்டி கொள்ள தேவை இல்லை .

2 comments:

  1. உண்மைதான்...இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட அரசியல் மயப்படுத்தப்படாமல் இருக்கின்ற ஒரே சமூகம் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்தான் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் மர வட்டிலிருந்து இறங்கி வந்து வெளி உலகை பார்க்காதவரை இலங்கையில் முஸ்லிம் சமூகம் ஒரு சாண் கூட முன்னேறுவது கடினம் என்பது சரியான அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்கள் இவ்வாறு காலத்துக்குக்காலம் உப்புச்சப்பில்லாத தனது கற்பனைக்கு மட்டும் சரியான அறிக்கைகளை விட்டு காலத்தை கடத்த வேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.